Newskadai.com
தமிழ்நாடு

“போலீஸ், அரசு அதிகாரிகளுக்கு மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லை”… உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்…!

Share this:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியைச் சேர்ந்த மணிவேல் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில், எங்கள் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கரடுகுளம் கண்மாய் உள்ளது. சுற்றுப்பகுதியில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்கு இந்த கண்மாயின் தண்ணீரை நம்பி உள்ளோம். 200க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் இந்த நீர் ஆதாரத்தை நம்பியே உள்ளன.

இந்த கண்மாய்க்குள் மருத்துவ கழிவுகளை கொட்டியும் எரித்தும் வருகின்றனர். இதனால் எங்கள் கண்மாயில் உள்ள நீர் மாசுபடுவதுடன் நிலத்தடி நீரும் மோசடைந்துள்ளது. மேலும் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை தடுத்து நிறுத்தக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர், மணப்பாறை தாசில்தார், மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கரடுகுளம் கண்மாயில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை தடுக்க உத்தரவிட வேண்டும். என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.


நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பிற மாநில எல்லைகளுக்குள் கழிவு பொருட்கள் செல்ல முடியாதவாறு போலீசாரும், அதிகாரிகளும் மக்கள் நலன் கருதி செயல்படுகின்றனர். ஆனால் அங்கிருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்திற்குள் கொண்டு வருகின்றனர். ஆனால், இங்குள்ள போலீசாரும், அதிகாரிகளும் மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் அலட்சியமாக இருக்கின்றனர்” என நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

மேலும், “ இந்த வழக்கு குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் உரிய பதில் அளிக்க வேண்டும். மனுதாரர் பகுதியில் உள்ள கண்மாயில் உள்ள மருத்துவக்கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் சுகாதாரத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்த துறையினரும் உரிய பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை நவம்பர் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Share this:

Related posts

தமிழக ராணுவ வீரர் திருமூர்த்தி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…!!

AMARA

மார்பில் அடித்துக்கொண்டு கதறும் விவசாயிகள்… சேதமான நெல் மூட்டைகளை சாலையில் கொட்டி போராட்டம்..!

MANIMARAN M

10ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதும்… காத்திருக்கிறது அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

NEWSKADAI

நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… மனம் குளிரவைத்த கோவை மாநகராட்சி…!

NEWSKADAI

கோவை சிறையில் ‘கைதி’ தூக்கிட்டு தற்கொலை… சாவில் ‘சந்தேகம்’ இருப்பதாக உறவினர்கள் புகார்…!

THAVAMANI NATARAJAN

12 வயது சிறுமியை கொடூரமாக வன்கொடுமை செய்து கொலை… குற்றவாளி விடுதலைக்கு எதிராக கடையடைப்பு…!

THAVAMANI NATARAJAN