Newskadai.com
தமிழ்நாடு

மருத்துவ மாணவர்கள் கட்டாயம் 2 ஆண்டு அரசு பணி : உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

Share this:

மருத்துவ மேறபடிப்பு மாணவர்கள் படிப்பு காலம் முடிந்து கட்டாயம் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்றும், அதன் பிறகே சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதமானது என்றும், இதுபோன்ற எந்த நிபந்தனைகளும் அகில இந்திய மருத்துவப் படிப்பு கொள்கையில் விதிக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

2 அண்டுகள் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை, அவர்களுடைய சான்றிதழ்களை தமிழக அரசு திரும்ப வழங்க வேண்டும் என்று இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது,

இதை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டு கட்டாயம் பணி புரிய வேண்டும் என்ற அரசாணை செல்லும், 2 ஆண்டு பணி முடிந்த பின்னரே அவர்களது சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரியானது, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிட்டனர். மேலும், 2 ஆண்டுகள் பணி வழங்க முடியாத பட்சத்தில் மாணவ, மாணவியரின் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்… விதிமுறைகள் குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!

MANIMARAN M

கரூரில் நடந்த கொடூரம்: காரில் பயணித்த புதுமண தம்பதி விபத்தில் உயிரிழப்பு…!!

THAVAMANI NATARAJAN

அடுத்து 24 மணிநேரத்தில் வெளுத்து வாங்க போகும் கன மழை… வானிலை மையம் அறிவிப்பு..!!!

THAVAMANI NATARAJAN

கடலூரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்… ஆற்றங்கரையோரத்தில் கிடந்த பைக்குள் காத்திருந்த அதிர்ச்சி…!!

THAVAMANI NATARAJAN

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை…. உற்சாக வெள்ளத்தில் தூத்துக்குடி மக்கள்..!!

AMARA

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN