Newskadai.com
தமிழ்நாடு

சேலத்தை கதறவிடும் ‘கொரோனா’… 136 இடங்களில் இன்று மருத்துவ முகாம்…!!

Share this:

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிகையாக தமிழக அரசு பல்வேறான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மருத்துவ முகாம்கள், ஆம்புலன்சுகள், பொது மக்கள் கூடும் பகுதிகளில் அடிக்கடி தூய்மைபடுத்தும் பணிகள், பேருந்துகளை தூய்மைபடுத்துதல் போன்ற பல்வேறான நற்செயல்களை செய்து வருகிறது.

இதனை தொடர்ந்து சேலத்தில் இன்று 136 இடங்களில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்று மாநகராட்சி கமிஷனர் சதீஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் இன்று 14-ம் தேதி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பத்து இடங்களான சூரமங்கலம் மண்டலத்தில் ராம்நகர் மெய்யனூர். அந்தோணிபுரம் பழைய சூரமங்கலம். அஸ்தம்பட்டி மண்டலத்தில் பிரியங்கா காலனிகான்வென்ட்ரோடு, ஆதிராமன் தெரு செவ்வாய் பேட்டை, ஆண்டாள் தெரு செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை மண்டலத்தில் சேர்மேன் ராமலிங்கம் தெரு, குறிஞ்சி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஜெய் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் பாண்டுரங்கவிட்டல் தெரு, வடக்கு முனியப்பன் கோவில் தெரு ஆகிய இடங்களில் மருத்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடும் உழவர் சந்தைகள், பேருந்து நிலையங்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைப் பகுதிகள் மற்றும் கடைவீதிகள் உள்ளிட்ட 126 இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் மொத்தம் 136 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று நடைபெறுகிறது. பொது மக்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி கமிஷனர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Share this:

Related posts

பிரதமர் திட்டத்திலேயே கை வைப்பீங்களா?… கொதித்தெழுந்த எல்.முருகன்… தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

MANIMARAN M

வெளுத்து வாங்க போகும் வடகிழக்கு பருவமழை : அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை…!!

THAVAMANI NATARAJAN

நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

ஏழைகளின் நண்பன் 10 ரூபாய் டாக்டர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விரட்டி வந்த எமன்!!

NEWSKADAI

ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்… அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை…!!

MANIMARAN M