Newskadai.com
தமிழ்நாடு

நீட் தேர்வு கேள்வித்தாள் எப்படி இருந்தது?… மாணவர்கள் கூறிய பகீர் பதில் இதுதான்…!!

Share this:

கடும் எதிர்ப்புக்கிடையே நாடு முழுவதும் நீட் தேர்வு நிறைவடைந்துள்ளது. 3 ஆயிரத்து 842 மையங்களில் நடத்தப்பட்ட தேர்வை 15 லட்சத்து 97 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சென்னை, கோவை, சேலம் உட்பட 14 நகரங்களில் 238 மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தேர்வறைக்குள் மாணவ, மாணவிகள் குடிநீர் பாட்டில் மற்றும் சானிடைசரை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. தேர்வு மையத்திற்கு வந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னரே நீட் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 2 மணி அளவில் தொடங்கிய தேர்வு சரியாக மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

இதனிடையே நீட் தேர்வு குறித்து மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி மாநில பாட திட்டத்தின் கீழ் 20 முதல் 30 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாக கூறியுள்ளனர். பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேட்கப்பட்டதாகவும், தாவரவியல், வேதியியல், உயிரியல் பாடம் எளிதாக இருந்த போதும், இயற்பியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக நடந்த நீட் தேர்வுகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலேயே அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

நீட் தேர்வால் தற்கொலை… அரியலூர் மாணவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி…!!

AMARA

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

5 மாதத்திற்கு பிறகு பேருந்து பயணம்… பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய  பேருந்து சேவை…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் அக்.1 முதல் “ஒரே நாடு : ஒரே கார்டு” திட்டம்…

MANIMARAN M

தொடரும் நீட் தேர்வு மரணங்கள்: கைக்கு வராத ஹால்டிக்கெட்… மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!!

MANIMARAN M

பேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்… தனியார் பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்…!!

MANIMARAN M