Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

இது மத்திய அரசின் சூழ்ச்சி… சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து குறித்து பகீர் கிளப்பும் வைகோ…!

Vaiko MDMK
Share this:

நாடு முழுவதும் தீயாய் பரவி வரும் கொரோனா 2வது அலையைக் கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வைப் போலவே பிளஸ் 2 பொதுத்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதுகுறித்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடத்திய மத்திய அரசு, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால் இது மத்திய அரசின் திட்டமிட்ட சூழ்ச்சி என மதிமுக பொதுச்செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education) ஆகியவற்றில், மேனிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கின்றார், ஆனால், நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை, இந்த ஆண்டும் நடத்தப் போகின்றார்கள்.

Vaiko MDMK

அப்படியானால், அந்தத் தேர்வு எழுதுகின்ற அந்த மாணவர்களின் உடல்நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்கள் மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா? அவர்களை மட்டும் கொரோனா தொற்று தாக்காமல், விதிவிலக்கு அளிக்குமா? எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமே ஆகும். காரணம், அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்து திணித்து இருக்கின்ற புதிய கல்விக்கொள்கையின்படி, கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலைப்பள்ளித் தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை என்று கூறி இருக்கின்றார்கள்.

எனவே, இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எப்போதுமே மேனிலைப்பள்ளித் தேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என்பதுதான் அவர்கள் திட்டம் ஆகும். ஆனால், மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தமட்டில், மேனிலைப் பள்ளித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான், கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகின்றது. அயல்நாடுகளின் பள்ளி, கல்லூரிச் சேர்க்கைக்கும் அந்த மதிப்பெண்களே கணக்கில்
எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் அதுவே தகுதியாக இருக்கின்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும்; நீட் தேர்வு கூடாது என்பதுதான், தமிழ்நாட்டின் கருத்து ஆகும்.

எனவே, ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்; கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒரு மாத முன் அறிவிப்போடு, மேனிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல், தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில், மேனிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்ற தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Share this:

Related posts

வீடு திரும்பினார் விஜயகாந்த்… மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்…!

NEWSKADAI

கைலாசாவிற்கு வர இந்த மூணு ஊர்காரங்களுக்கு முன்னுரிமை… நித்தியின் தமிழ்நாட்டு பாசம்…!!

AMARA

தேனியில் போஸ்டர்… ஓபிஎஸ் – இபிஎஸ் வீடுகளில் மாறி, மாறி அமைச்சர்கள் ஆலோசனை… அதிமுகவில் பதற்றம்…!!

AMARA

“தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமே கிடையாது”… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி…!!

AMARA

ஸ்கூல் இருக்கு…. ஆனா இல்ல… மாணவர்களை குஷி படுத்திய அறிவிப்பு

MANIMARAN M

எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீப்பந்தம் ஏந்திய மக்கள்… தீவிரமடையும் போராட்ட ‘தீ’!!

POONKUZHALI