ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் The Family Man 2 என்ற இந்தித் தொடரை நிறுத்தக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் “The Family Man 2 என்ற இந்தித் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்தக் கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்தத் தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
தமிழர்களைப் பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.
The Family Man Season 2 Trailer Gets A Shattering Response – 5 Million In 5 Hours & Counting!
ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ்ப் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக்காட்சிகள் இருக்கின்றன. இத்தகையக் காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்தத் தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். The Family Man 2 தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.