Newskadai.com
தமிழ்நாடு

மணல் கடத்தல் வழக்கு… மாவட்ட ஆட்சியருக்கு கிடுக்குப்பிடி…!!

Share this:

மணல் எடுக்க பெற்ற அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி விவசாய நிலங்களில் அதிக அளவில் சவுடு மணல் அள்ளப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகங்கையைச் சார்ந்த விவசாயி வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சிவகங்கையில் அகழாய்வு நடக்கும் கீழடி மணலூரில் சவுடு மண் எடுக்க பெற்ற அனுமதியை முறைகேடாக பயன்படுத்தி விவசாய நிலங்களில் அதிக அளவில் மணல் தோண்டி எடுக்கின்றனர். இதனால் விவசாய நிலங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது, எனவே மணல் அள்ளும் அனுமதியை ரத்து செய்ய வேண்டு என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மணல் எடுப்பது தொடர்பாக பல உத்தரவுகள் நீதிமன்றம் பிறப்பித்தும் மீண்டும் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் வருகின்றன, சவுடு மண் எடுக்க பெறப்பட்ட அனுமதி முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா இல்லையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை செய்துள்ளனர். பின்னர், இவ்வழக்கை செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அதற்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.


Share this:

Related posts

கோயம்பேடு மார்க்கெட் திறந்தாச்சு. வியாபாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு

NEWSKADAI

“நீட் தேர்வை கட்டாயம் எழுதி தான் ஆகனும்”… சேலத்தில் கொந்தளித்த பிரபல நடிகை…!!

THAVAMANI NATARAJAN

சுதந்திர தினத்தை வீட்டிலேயே கொண்டாடுங்க…. வெளியில் வராதீங்க… முதல்வர் அறிவிப்பு.

MANIMARAN M

மாமா… டவுசர் கழறாம பாத்துக்கோ…. மப்ப விட மானம் முக்கியம் தெரிஞ்சுக்கோ…

MANIMARAN M

7 பேர் கொண்ட குழு நியமணம் : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அதிரடி…

MANIMARAN M

சேலத்தை அடித்து நொறுக்கிய பேய் மழை… வீடுகளை சூழ்ந்த வெள்ள நீரால் மக்கள் அவதி…!!

THAVAMANI NATARAJAN