Newskadai.com
சினிமா

அக்டோபர் 1-ல் தியேட்டர்கள் திறப்பு?… மத்திய அரசுடன் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் நிறைவு…!!

Share this:

இந்தியாவில் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பித்த மார்ச் மாதம் முதலே தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்பிற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சினிமாவை நம்பி வாழ்க்கையை ஓட்டி வந்த லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். குறிப்பாக தமிழகத்தில் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென பெப்சி சார்பில் தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது.

மேலும் படிக்க : http://பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… திரையுலகை அடுத்தடுத்து தாக்கும் அதிர்ச்சி

தற்போது செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சினிமா ஷூட்டிங்கை நடத்திக்கொள்ள அனுமதி அளித்தன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங்கை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்புகளும் ஆரம்பமாகி வருகிறது. இருப்பினும் திரைத்துறையினர் மற்றும் சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தியேட்டர்கள் திறப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மட்டும் 25 லட்சம் குடும்பங்கள் வருவாய் இன்றி வாடுவதாக தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் திரையரங்குகளை திறப்பது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் காணொலி மூலமாக கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் டிக்கெட்டுக்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்க வேண்டும், 25 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, தனிமனித இடைவெளி, காலை மற்றும் நண்பகல் என இரு காட்சிகளை மட்டுமே திரையிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க : http://‘கொரோனா’ வாங்க கறிக்கடை, மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்… அலட்சியத்தின் உச்சம்…!!

ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் 50 சதவீத பார்வையாளர்களையாவது அனுமதிக்க வேண்டும், ஒரு குடும்பமாக வருபவர்களை ஒரே வரிசையில் அமர வைக்க அனுமதிக்க வேண்டும், 4 காட்சிகளுக்கு அனுமதி, ஜி.எஸ்.டி. குறைப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தியேட்டர் உரிமையாளர்களுடனான மத்திய அரசின் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இருதரப்பும் பரஸ்பர உடன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற நல்ல செய்தியும் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Share this:

Related posts

“10 லட்சம் குடும்பத்தை காப்பாத்துங்க”… முதல்வரிடம் கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

“மீண்டு வா… இசை உலகை ஆள வா”…. எஸ்.பி.பி. உடல்நலம் பெற வேண்டி வைரமுத்து உருக்கம்…!

NEWSKADAI

சூர்யாவிற்கு துணை நிற்கும் அஜித், தனுஷ், ஜெயம் ரவி… போஸ்டர் ஓட்டி தெறிக்கவிடும் ரசிகர்கள்…!!

AMARA

காதல் டூ கண்மணி…. சின்னத்திரை மூலம் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்க போகும் பிரபல நடிகை…!!

THAVAMANI NATARAJAN

கருத்து சொல்ல மட்டுமல்ல… சொல்லால் விமர்சித்தவர்களை செயலால் திருப்பி அடித்த ஜோதிகா…!

AMARA

கொலையா? தற்கொலையா?… சிபிஐ கைக்கு போன சுஷாந்த் மரண வழக்கு…!!

MANIMARAN M