Newskadai.com
தமிழ்நாடு

மத மோதலை தூண்டிய பாஜக… எஸ்.பி. வருண்குமார் மாற்றத்திற்கு எதிராக குவியும் கண்டனங்கள்…!!

Share this:

ராமநாதபுரத்தில் இரு போதைப்பொருள் கும்பலுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை தேடி வருகிறது. இதற்கிடையில் இந்தக் கொலை மதச் சம்பந்தமாக நடந்துள்ளது என்ற கருத்தை ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்தவர்கள் பலர் சமூக வலைதளம் மூலம் பரப்பி மத மோதலை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் காவல்துறை விசாரணையில் இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை என்றும், இந்த சம்பவம் தொடர்பில் எந்தவொரு மதப் பிரச்சனையும் இல்லை என்றும் ராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் கூறினார். காவல்துறையினரின் துரித நடவடிக்கை மட்டும் நேர்மையான விசாரணையால் தமிழகத்தில் பெரும் மதக்கலவரம் தவிர்க்கபட்டுள்ளது என்று பல அரசியல் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சிபிஐ(எம்) கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “அரசியல் லாபத்திற்காக மத மோதலை திட்டமிட்டு தூண்டுகிற பாஜக நிர்வாகிகள் மீது உரிய வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல தலைவர்கள் கண்டணம் தெரிவித்துள்ளனர்.

மனிதேநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “ராமநாதபுரத்தில் இரு போதை பொருள் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் நடைபெற்ற படுகொலையை நேர்மையான முறையில் விசாரித்த மாவட்ட எஸ்.பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா? என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியும் வருண்குமார் இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “இரு தினங்களுக்கு முன்பு இராமநாதபுரத்தில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் நடைபெற்ற படுகொலையை, மத சாயம் பூசி, மத மோதலாக மாற்ற நடைபெற்ற முயற்சியை முறியடித்து, அதனை நேர்மையாக விசாரித்து நடைபெற்ற சம்பவம் மத ரீதியான பிரச்சனை இல்லை இருதரப்பினர்கிடையான பிரச்சினையே என அறிக்கை வெளியிட்டு அமைதியை ஏற்படுத்தி நேர்மையுடன் செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அரசு கொடுத்த பரிசு காத்திருப்போர் பட்டியல். இது துணிச்சலுடன், நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் மீதான அச்சுறுத்தல்” என்று எம்.பி. நவாஸ் கனி கூறியுள்ளார்.


Share this:

Related posts

கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவை… அரை மணி நேரத்திற்கு இவ்வளவு காசா?

THAVAMANI NATARAJAN

“வடிவேல் பாணியில் வாத்தியார்களைக் கலாய்த்த மாணவன்”… சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர்…

MANIMARAN M

அடித்து சொல்லும் அண்ணா யூனிவர்சிட்டி… அரசின் ஊசல் ஆட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

வசமாக சிக்கிய ஆதாரம்… மத கலவரத்தில் இருந்து தப்பிய கோவை… பகீர் வீடியோ…!!

MANIMARAN M

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை…. உற்சாக வெள்ளத்தில் தூத்துக்குடி மக்கள்..!!

AMARA

செப் 14 ல் மனித சங்கிலி போராட்டம்… கும்பகோணம் தனி மாவட்டம் போராட்டக் குழுவின் அடுத்த அதிரடி…

MANIMARAN M