Newskadai.com
தமிழ்நாடு

தள்ளுபடியில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குபவரா நீங்கள்… இந்த விஷயத்தில் உஷாரா இருங்க..!!

fake discounts
Share this:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எலக்ட்ரிக் சாதனங்கள், பர்னிச்சர்ஸ், போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை தள்ளுபடி விலைக்கு விற்பது வழக்கம். எனவே மக்கள் அதிக அளவு தீபாவளி பண்டிகைகளிலே வீட்டு பொருட்களை வாங்குவார்கள். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீட்டு உபயோக பொருட்களை விற்கும் ஒரு சில கடை உரிமையாளர்கள் போலியான பொருட்களை விற்று வருகிறார்கள்.

அந்த வகையில் திருச்சியில் பீமா நகர் பகுதியில் உள்ள சிட்டிபிளாசா வணிகவளாகத்தில்  திருச்சி எலக்ட்ரானிக்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தீபாவளி பண்டிகையையொட்டி முன்னனி நிறுவனங்களின் டிவி, பிரிட்ஜ், உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.jail

இந்த நிலையில் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவர் சோனி நிறுவனத்தின் 32 இன்ச் எல்இடி வாங்கியுள்ளார். வீட்டில் டி.வி.யை பொருத்தி ஆன் செய்ய முயன்றபோது டி.வி. ஆன் ஆகவில்லை. இதனால் சம்மந்தபட்ட கடைக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் கடை உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை. சந்தேகமடைந்த சவுகத் அலி, சோனி சர்விஸ் சென்டருக்கு சென்று தான் வாங்கிய புதிய டி.வியை பரிசோத்திதுள்ளார். அப்போது டி.வி போலியானது என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து பாலக்கரை காவல் நிலையத்தில் சவுகத் அலி புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வளார் ஆரோக்கியதாஸ் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கிருந்த அனைத்து எல்இடி டிவிக்களும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் நிஜாமுதீன், விற்பனையாளர்கள் முகம்மது பைசல், சரவணன் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் 153 டிவிக்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிக்க :http://பச்சிளம் குழந்தையோடு பயணித்த பைக் விபத்தில் சிக்கிய நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…


Share this:

Related posts

அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி… 13 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை..!

THAVAMANI NATARAJAN

கோவையில் கொரோனா பீதி… நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

MANIMARAN M

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்காக ஒன்றிணைந்த போலீசார்… சம்பளத்தில் இருந்து ரூ.86 லட்சம் நிதியுதவி…!

THAVAMANI NATARAJAN

அம்மாடியோவ்… இருமடங்காக அதிகரிக்கப்பட்டது மேட்டூர் அணை நீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN

மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட கொரோனா… இன்றைய நிலை..!!

NEWSKADAI

ஒரு முறை தேர்ச்சி பெற்றாலே போதும்… TET தேர்வில் வரவிருக்கும் புதிய மாற்றம்…!

THAVAMANI NATARAJAN