Newskadai.com
அரசியல் இந்தியா

கருப்பு பூஞ்சையை தொடர்ந்து மிரட்டும் மஞ்சள் பூஞ்சை

yellow-fungus
Share this:

கருப்பு வெள்ளை பூஞ்சயை காட்டிலும் மஞ்சள் பூஞ்சை மிகுந்த ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் லேசான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று எச்சரிக்கப்படுறார்கள்.

நாடு முழுவதிலும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து ஆயிரகணக்கானோரை பலி வாங்கி வருகிறது. கொரோனாவின் அச்சத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமான நபர்களுக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு பரவுவதாக செய்திகள் வெளியாகின. இதனால் பலருக்கு கண் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணம் வரை செல்லும் ஆபத்தான நிலை ஏற்படுகிறது. இந்த தகவல் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள சூழலில் புதிதாக மஞ்சள் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நோயாளி ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. பாதிப்பு மிகுந்த அந்த நபர் ENT சிறப்பு சிகிச்சை நிபுணர் பிரிஜ் பால் தியாகியிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மஞ்சள் பூஞ்சை கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்றை காட்டிலும் மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடலின் உட்பகுதியில் பாதிப்புகள் ஏற்படுவதால் லேசான அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்:

சோம்பல், குறைந்த அளவு பசி, பசியின்மை, எடை இழப்பு ஆகும். மிகத் தீவிர பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, உடலில் காயங்கள் இருந்தால் மெதுவாக ஆறுதல், உடல் உறுப்புகள் செயலிழப்பது, கண்களைச் சுற்றி கருமை நிறம் அடைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

Black_fungus

நோய்க்கான காரணங்கள்:

சுகாதாரமற்ற நிலை தான் மஞ்சள் பூஞ்சை தொற்று பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் ஈரப்பதமான சூழல் முக்கியம். அதுவே அளவுக்கு அதிகமாக போய்விட்டால் பாக்டீரியா, பூஞ்சை வளர காரணமாக அமைந்துவிடும். வீட்டில் நீண்ட நாட்களாக வைத்திருக்கும் உணவுப் பொருட்களை உடனே தூக்கி எறிய வேண்டும். இதன்மூலம் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

சிகிச்சை:

மஞ்சள் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு இருக்கும் ஒரே சிகிச்சை முறை Amphotericin B என்ற ஊசி போட்டுக் கொள்வது தான் ஆகும். இது பூஞ்சைகளுக்கு எதிரான மருத்துவத் தன்மை கொண்டது.


Share this:

Related posts

இது மத்திய அரசின் சூழ்ச்சி… சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து குறித்து பகீர் கிளப்பும் வைகோ…!

AMARA

“அது எல்லாம் முடிந்து போன விவகாரம்”… ஆர்.பி.உதயக்குமாரை அசிங்கப்படுத்திய எடப்பாடியார்…!!

MANIMARAN M

கேரள முதல்வரையே மிரள வைத்த கோமதி… ‘சிங்கிள்’ஆளாக ஜெயித்த சிங்கப்பெண்…!!

MANIMARAN M

நீட் தேர்வை நடத்த முடியாதுன்னு அறிவீங்க… அடுத்தடுத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்…!!

AMARA

இந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

AMARA

கொரோனாவிலிருந்து மீண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா…. கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்…!!

NEWSKADAI