Newskadai.com
உலகம்

இந்த ஆண்டு முடியும் வரை யாரும் எங்கள் நாட்டிற்குள் வர வேண்டாம் : மலேசிய அரசு அதிரடி!!

Share this:

COVID-19 கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய்த் தொற்று அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் இன்று வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆறு மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் அனைத்து செயல்பாடுகளும் முடங்கிப்போய் பல்வேறு நாடுகள் பொருளாதார சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிவரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்படுவதாக மலேசியா அரசு அறிவித்துள்ளது. மலேசியாவில் இதுவரை கொரோனாவல் 9300 பேர் பாதிக்கப்பட்டு 125 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 

இது குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றிய மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் கூறியதாவது, உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலேசியாவில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் அவ்வப்போது நாட்டில் பாதிப்புகள் உயர்வதாக கூறினார். அதனால் இந்த ஆண்டு இறுதிவரை வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டினுள் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காது என்று முஹைதீன் கூறினார். இரவு விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் எல்லைகள் மூடப்பட்டிருக்கும், அவசியத் தேவைக்காக நாட்டிற்குள் நுழைவோர் கட்டாயம் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று கூறினார்.


Share this:

Related posts

டெம்பிள் சிட்டி குமாருக்கு நித்தியானந்தா கொடுத்த வாக்குறுதி… மாஸ் காட்டும் மதுரைவாசி…!!

AMARA

மக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

NEWSKADAI

தியாகத் திருநாள்… நிபந்தனையற்ற அன்பு செய்வோம் வாருங்கள்…

MANIMARAN M

சிங்கப்பூரில் ஆட்குறைப்பின் எதிரொலி… வேலையில்லாமல் நாடு திரும்பும் இந்தியர்கள்…

MANIMARAN M

லெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…!!

MANIMARAN M