லாக்டவுன் நேரத்தில் தொடர்ந்து வரும் திரைப்பிரபலங்களின் மரண செய்தி ரசிகர்களை அடுத்தடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. பாலிவுட்டில் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட், கன்னடத்தில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சார்ஜா, மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான அய்யப்பனும், கோசியும் பட இயக்குநர் சச்சி என அடுத்தடுத்து துக்க செய்திகள் மனதை ரணமாக்கி வருகிறது.
மேலும் படிக்க:http://“ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்கலாம்”… மத்திய அரசின் பரிந்துரையால் நொந்து போன திரையரங்கு உரிமையாளர்கள்…!
இந்நிலையில் பிரபல வில்லன் நடிகரின் மறைவு செய்தி ரசிகர்களையும், திரையுலகினரையும் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் அனில் முரளி. தற்போது 56 வயதாகும் இவர் இன்று காலை திடீரென உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான கவிதா என்ற படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அனில் முரளி, அதன் பின்னர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒட்டு மொத்த தென்னிந்திய திரையுலகையும் தனது மிரட்டலான நடிப்பால் மிரளவைத்தவர். தமிழில் நிமிந்து நில், கணிதன், அப்பா, தனி ஒருவன், தொண்டன், மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவருடைய நடிப்பில் சிபிராஜின் வால்டர் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:http://மாணவர்களின் கல்வியில் கல்லைத் தூக்கிப் போட்ட மத்திய அரசு… புதிய கல்விக் கொள்கை 2020…!!
கல்லீரல் பிரச்சனை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனில் முரளி, நேற்று நள்ளிரவு 12.45 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் அனில் முரளிக்கு சுமா என்ற மனைவியும், ஆதித்யா, அருந்ததி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.