Newskadai.com
இந்தியா

“உங்க மேக் இன் இந்தியா, தற்சார்பு பேச்செல்லாம் பித்தலாட்டம்”… மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்…!!

Share this:

நீதிமன்றங்களில் கடுமையான கண்டனத்திற்கு மேலும் ஆளாகி இருக்கிறது மத்திய அரசு. நாட்டிலுள்ள விமான நிலையங்களை சில குறிப்பிட்ட தனியார் பெரு முதலாளிகளுக்கு பல ஆண்டு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. கேரள மாநில அரசு இதற்கெதிராக சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது நாம் அறிந்த விஷயம்.

தற்பொழுது விமானத்தை சுத்தம் செய்தல், சரக்குகளை கையாளுதல், விமானங்களை வரிசையாக நிற்க வைக்க ஒத்துழைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் சிறு நிறுவனங்களின் கூட்டமைப்பான சிஏபிஎஸ்ஆர் (CAPSR) மத்திய அரசுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் சரக்குகளை கையாளுதல் விமானங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு நிறுவனங்களை தேர்வு செய்யும் ஏலம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஏலத்தில் ஆண்டுக்கு 35 கோடிக்கு மேல் விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்கள் தான் பங்கு பெற முடியும் என புது விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து சி ஏ பி எஸ் ஆர் அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விபின் சாங்கி, ரஜ்நிஷ் பட்னாகர் இருவரும் மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் இந்திய விமான ஆணையத்தின் நிலைப்பாடு குறித்து கடுமையான அதிர்ச்சியை சொலிசிட்டர் ஜெனரல் இடம் வெளிப்படுத்தினர்.

மத்திய அரசின் நிலைப்பாடு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அரசின் தலைமைப் பதவியில் உள்ளவர்கள் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா என பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் செயல்பாடு அவர்களின் வார்த்தைக்கு பொருத்தமாக இல்லை. முழுமையாக போலித்தனமாக இருக்கிறது. மத்திய அரசும் இந்திய விமான ஆணையமும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு உடைய பெரிய நிறுவனங்கள் மட்டும் தான் ஏலத்தில் போட்டியிட வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா…? சிறு நிறுவனங்களை ஏலத்தில் இருந்து வெளியேற்ற விரும்பினால் வெளிப்படையாக அவர்களுக்கு வாய்ப்பில்லை என்று கூறுங்கள் மேக் இன் இந்தியா, தற்சார்பு பொருளாதாரம் பற்றி பேசாதீர்கள்.

சிறு நிறுவனங்களை துரத்தி விடும் வகையில் விதிகளை மாற்றும் செயல்பாடு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. சிறு நிறுவனங்கள் வளர்வதற்கு அனுமதிக்காவிட்டால் சந்தையில் பெரும் நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும். ஒரு கட்டத்தில் அவர்கள் அரசுக்கு கட்டளை இடுவார்கள். நம் மண்ணைச் சேர்ந்த சிறுதொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் நாடு அலட்சியமாகவும் உணர்ச்சியற்றதாகவும் இருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இந்திய விமான ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Share this:

Related posts

NEET, JEE தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா? மாணவர்களின் முடிவு இதோ…!!

POONKUZHALI

வெள்ளக்காடாய் மாறிய மருத்துவமனை… பாஜக அரசின் அலட்சியத்தால் தண்ணீரில் தத்தளிக்கும் நோயாளிகள்…!!

NEWSKADAI

லாக்டவுனிலும் வாடகை தந்தே ஆக வேண்டும்… ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அதிரடி…!..!

NEWSKADAI

கொரோனா வைரஸ் போயே போச்சு.!! பாஜக தலைவரின் அதிரடி பேச்சு…!!

MANIMARAN M

டிஸ்லைக்குகளை குவிக்கும் பிரதமரின் வீடியோக்கள்… அழுகுனி ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக…!!

MANIMARAN M

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்… இடிபாடுகளில் சிக்கிய 200 பேர் கதி என்ன???

MANIMARAN M