மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் போய்சர் நகராட்சியில் உள்ள நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் இரசாயனத் தொழிற்சாலையில் இன்று மாலை கடும் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
BREAKING VIDEO: Blast and fire at Nandolia Organic Chemicals Factory in #Palghar, #Maharashtra
Story: https://t.co/KNJxquo7Dw pic.twitter.com/yYC8aw6jVV
— Syed Naveed Ali Shah (@SyedNav33) August 17, 2020
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த இரசாயனத் தொழிற்சாலையில் 20 பேர் பணியில் இருந்ததாக பால்கர் மாவட்ட ஆட்சியர் கைலாஸ் ஷிண்டே தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மீதி தொழிற்லாளர்களை மீட்கும் பணியும், தீயை அணைக்கும் பணியும் நடந்து வருகிறது.