பெண்கள் பாலியலால் பாதிக்கப்படுவது என்பது இந்தியா மட்டுமின்றி அனைத்து உலக நாடுகளிலும் அரங்கேறி வருகிறது என்பது ஐயமில்லை. இருப்பினும் சிறுமிகள்தான் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். இது போன்ற கொடூர சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் நடந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 26ம் தேதி 2019 ஆண்டு தனது மகளை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விரைந்து குற்றவாளிகளை கைது செய்தனர். இந்த நிலையில் முறையான விசாரணையின் மூலம் குற்றவாளிககுக்கு எதிரான அனைத்து விதமான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்பித்தனர். இந்திய தண்டனை சட்டம் ஐபிசி பிரிவு 376 மற்றும் போக்ஸா சட்டத்தின் கீழ் நீதிமன்றம் இருவருக்கும் கடும் தண்டனையான மரண தண்டைனை அளிப்பது தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் நீதிமன்ற அளித்த மிகச்சரியான தீர்ப்பு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று சிக்லி போலீசார் மனநிறைவோடு தெரிவித்திருந்தனர். இவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக காவல் நிலையத்தை வியாழக்கிழமை இரவு அன்று கோவில் திருவிழாவிற்கு அலங்கரிப்பது போல் வண்ண மின்விளக்குகளால் அலங்கரித்தும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கோலாகலமாக கொண்டாடி தீர்ப்பை வரவேற்றனர்.