Newskadai.com
அரசியல்

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

Vijay
Share this:

மதுரை என்றாலே மல்லி, மீனாட்சி அம்மன் கோவில் இதையெல்லாம் தாண்டி போஸ்டருக்கும் பிரபலமானது. அரசியல் கட்சி தலைவர்களைத் தாண்டி, சினிமா நடிகர்களுக்கு மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்களும், அதில் இருக்கும் வாசகங்களும் சும்மா தெறிக்கவிடும். அதனால் சிக்கலில் சிக்கும் நடிகர்களும் உண்டு, அதிலும் நடிகர் விஜய்யை அடிக்கடி சிக்கலில் மாட்டிவிடுவதே இங்கு ஒட்டப்படும் போஸ்டர்கள் தான். அடிக்கடி விஜய்யை அரசியலுக்கு அழைத்து தினுசு தினுசாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

vijay

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் மாதம் திண்டுக்கலில் ஓட்டப்பட்ட போஸ்டர், ஒட்டு மொத்த அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியது. அண்ணா, பெரியாருடன் விஜய் பேசிக்கொண்டிருப்பது போல் அச்சிடப்பட்டிருந்தது. அத்துடன் நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார் என பில்டப் செய்து வாசகங்களை வேறு அச்சிட்டு இருந்தனர்.

vijay

அதேபோல் விஜய் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் இருந்த போது வருமானத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் மதுரையில் பல இடங்களில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதுவும் “ஒரு ஆணியும்… முடியாது…” என சோழவந்தான் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பியது.

vijay

இந்நிலையில் நேற்று தளபதி விஜய் – சங்கீதா தம்பதியின் 21வது திருமண நாளை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். விஜய் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் எம்.ஜி.ஆரைப் போல விஜய்யையும், ஜெயலலிதாவைப் போல சங்கீதாவையும் சித்தரித்திருப்பது அதிமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. கூடவே புரட்சி தலைவரே – புரட்சி தலைவியே என வாசங்களை வேறு போட்டு ஆளும் கட்சியினரை இஷ்டத்துக்கு காண்டாக்கியுள்ளனர்.


Share this:

Related posts

முதல்வர் வேட்பாளர் யார்.. ? முடிவு எடுக்க முடியாமல் திணறும் அதிமுக…

MANIMARAN M

தனியாக வசிக்கும் மூதாட்டியிடம் கேவலமாக நடந்து கொண்ட பாஜக நிர்வாகி… குவியும் கண்டனங்கள்…!

NEWSKADAI

“இந்திய மாணவர்களின் எதிர்காலம் இனி வெளிச்சமாகும்”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

THAVAMANI NATARAJAN

அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்??

AMARA

இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம்?… தொடரும் நீட் தேர்வு தற்கொலையால் தலைவர்கள் கொந்தளிப்பு…!!

AMARA

ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்…! மு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சுதந்திர தின வாழ்த்து செய்தி…

MANIMARAN M