Newskadai.com
அரசியல்

காய்கறி மாலையோடு சட்ட நகல் கிழிப்பு… வேளாண் மசோதாவிற்கு வேறமாதிரியான போராட்டம்..!!

Share this:

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இம்மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் தாக்கல் செய்த மசோதாக்களை ஆதரித்த அதிமுக மாநிலங்களவையில் எதிர்த்தது.

பாஜகவிற்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க்க கூடாது என பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வேளாண் மசோதா எதிர்ப்பு போராட்டத்திற்கு, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக் கோரி நேற்று மதுரையில் எஸ்டிபிஐ கட்சியினர் காய் கறி மாலைகள் அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர் மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரில் இருக்கும் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். 25 பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டதில் கலந்துக் கொண்டனர்.

முன்னதாக ஊர்வலத்தில் பங்குக் கொண்டவர்களில் பலர் காய்கறிகளை தலையில் தூக்கி வந்தனர். பலர் கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் மாலை அணிந்து  நூதன முறையில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி வேளான் மசோதாக்களின் நகல்களை கிழித்தெறிந்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சித் தலைவர் முஜிபுர்ரஹ்மான் தலைமையில் இந்த போராட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியம், மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். காய்கறிகளை தலையில் சுமந்தும் கழுத்தில் மாலையாக அணிந்தும் வந்து போராடியது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Share this:

Related posts

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?… கருத்துக்கணிப்புகளில் முதலிடம் பிடிக்கும் ஓ.பி.எஸ்….!

AMARA

#BREAKING அதிமுக வழிகாட்டு குழு அமைப்பு… 11 பேரின் பெயரை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….!!

NEWSKADAI

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று… சோகத்தில் உடன்பிறப்புகள்…!

AMARA

பாஜக, திமுக என பாரபட்சம் பார்க்காமல் பாயும் வழக்கு… லாக்டவுனில் கூடி கும்மாளம் போட்டால் அடித்து தூள் கிளப்பும் அதிமுக அரசு….!

AMARA

ஜெ.அன்பழகன் மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!

NEWSKADAI

“மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்குவோம்”… திமுக பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!

NEWSKADAI