Newskadai.com
சினிமா

வாபஸ் வாங்குறீயா இல்ல அபராதம் போடவா?… ரஜினிக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்த ஐகோர்ட்…!

warned rajinikanth for ragavendra hall
Share this:

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸ் எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Rajini

அந்த மனுவில், கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி செலுத்தியதாகவும், சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தி வருவதாகவும் கூறியிருந்தார். கொரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபம் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை என்றும், மார்ச் 24ம் தேதி பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கியுள்ளதாகவும் அந்த மனுவில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

மேலும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் 2 சதவித அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டுமென நோட்டீசில் குறிப்பிட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மண்டபம் காலியாக இருந்ததால் மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதால், அதுதொடர்பாக தன் தரப்பில் மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அதுவரை சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

warned rajinikanth for ragavendra hall

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென என ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23ல் கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீண்டிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும் எனவும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். நடவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றவில்லையா?, நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா? என்றும் கேள்வி எழுப்பினர்.

 

இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். அதன்பின்னர் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து, அதற்கான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கின் மீதான உத்தரவை மாலை பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்துள்ளார்.


Share this:

Related posts

என் மகன் சாவுக்கு காரணம் இதுதான்?…. கண்ணீர் விட்டு கதறிய வடிவேல் பாலாஜி அம்மாவின் பகீர் குற்றச்சாட்டு…!!

NEWSKADAI

“எம்.ஜி.ஆருக்கு செய்தது போல் எஸ்.பி.பி.க்கும் செய்யலாம்”…. ரஜினி, கமலுக்கு உருக்கமாக அழைப்பு விடுத்த பாரதிராஜா…!!

NEWSKADAI

மாட்டிவிட்ட வாட்ஸ் அப்… போதைப்பொருள் விவகாரத்தில் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகானுக்கு சம்மன்…!!

AMARA

எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது… பிரதமருக்கு முதல்வர் கடிதம்…!!!

MANIMARAN M

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்… செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை…!!

AMARA

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகருக்கு அடித்தது ஜாக்பாட்… விஜய் வீட்டிலிருந்து வந்த சர்ப்ரைஸ் போன்கால்…!!

THAVAMANI NATARAJAN