Newskadai.com
தமிழ்நாடு

அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

Share this:

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தொடர்பாக யூ-டியூப்பர் மாரிதாஸ் வெளியிட்டு வந்த செய்திகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இதுகுறித்து சென்னை குற்றவியல் போலீசாரிடம் நியூஸ் 18 டி.வி. சேனலின் எடிட்டர் வினய் சரவாகி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னைப் பற்றியும், தனது செய்தி சேனல் குறித்தும் மாரிதாஸ் அவதூறு பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

 

வினய் சரவாகி பெயரில் போலி இமெயில் ஐடி கிரியேட் செய்ததாக மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயர் இல்லை என்று கூறப்பட்டது. நியூஸ் 18 தொலைக்காட்சி, அதன் முதன்மை ஆசிரியர் குணசேகரன் மற்றும் செய்தியாளர்கள் குறித்து மாரிதாஸ் தொடர்ந்து 4 அவதூறு வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். இப்படி அவதூறு வீடியோக்களை வெளியிட்டா மாநிதாஸிடம் ரூ.1.5 கோடி நஷ்ட ஈடுகேட்டு நியூஸ் 18 தொலைகாட்சியும் ஆசிரியர் மு.குணசேகரனும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுவில், மக்களிடையே மத ரீதியான பிளவு ஏற்படுத்தும் வகையிலும், செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் சமூக வலைதளங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனி நபர் ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி குறித்து ஆதாரமற்ற செய்திகளை வெளியிட கூடாது என்றும் கருத்து தெரிவித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி மாரிதாஸுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


Share this:

Related posts

காசு கொழுத்துபோன நித்யானந்தா… கைலாசாவுக்கு தனி பேங்கு தெறக்கப்போறாராம்…

THAVAMANI NATARAJAN

“மாணவர்களின் மனித கடவுளே”… ஆல் பாஸ் போட்ட முதல்வரை போஸ்டர் ஒட்டி திக்குமுக்காட வைக்கும் மாணவர்கள்…!

MANIMARAN M

கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவை… அரை மணி நேரத்திற்கு இவ்வளவு காசா?

THAVAMANI NATARAJAN

எங்கள காப்பாத்துங்க: கோவையில் ஒற்றைக்காலில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…!!

MANIMARAN M

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே… தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர் நீதிமன்றம்…!!

AMARA

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M