Newskadai.com
இந்தியா

7 மாத குழந்தையையும் விட்டு வைக்காத காவல்துறை… தலித் விவசாயி மீது நடந்த கொடூர தாக்குதல்…!

Share this:

கடன உடன வாங்கி உழுது, வெதச்சு, கண்ணு முழிச்சு தண்ணீர் பாய்ச்சி, பூவும் பிஞ்சும் காய்க்கிற பருவத்துல… ஆடு மாடு வந்து மேய்ஞ்சாலே பதறிப் போய்டுவான் விவசாயி… அப்படிப்பட்ட விவசாய நிலத்துல அறுவடைக்குத் தயாரா நிற்கிற பயிர்களை ஒருத்தன்… புல்டோசர் விட்டு அழிச்சா அந்த விவசாயி என்ன பண்ணுவான்…. அப்படி பாதிக்கப்பட்ட ஒரு விவசாயினுடைய கதைதான் இது.

ராஜ்குமார் ஒரு விவசாயி. மனைவி, 6 குழந்தைகள், அம்மா, அப்பா, திருமணமாகாத தம்பி அப்படின்னு பெரிய கூட்டு குடும்பம் ராஜ்குமார் உடையது. இவர்கள் அனைவருடைய வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமே விவசாயம் மட்டும்தான். சொந்த நிலம் இல்லாத அந்த ஏழை தலித் விவசாயக் கூலி குடும்பம், ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்றாங்க…. வழக்கமா வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் பண்ணுவாங்க… அறுவடை முடிஞ்சதும் வாங்கின கடன வட்டியோடு குடுப்பாங்க…

ராஜ்குமார் மட்டும் இல்ல… நம்ம நாட்டுல இருக்குற முக்கால்வாசி விவசாயிகளுடைய பழக்கம் இப்படித்தான். கடந்த ரெண்டு வருஷமா எந்த பிரச்சினையும் இல்லாம பொழப்பு போய்கிட்டு இருந்துச்சு. இந்த நிலத்தை கபூர் பாரதிங்கிற உள்ளூர் முன்னாள் கவுன்சிலர் கிட்ட இருந்து குத்தகைக்கு எடுத்து இருந்தார் ராஜ்குமார். கபூர் பாரதி கடந்த 35 வருஷமா அந்த நிலத்துல விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்திருக்கார். அந்த இடம் ஆதர்ஷ் மஹாவித்யாலாவுக்கு சொந்தமானதுனும்…

police

கபூர் பாரதி அந்த நிலத்தை இத்தனை வருஷமும் ஆக்கிரமித்து வைத்திருந்ததும் பாவம் அந்த தலித் ஏழை விவசாயிக்கு தெரியாம போச்சு. வழக்கம்போல வட்டிக்கு கடன் வாங்கி இந்த வருஷமும் விவசாயம் சென்சாங்க. ஆனா இந்த வருஷம் ஜூலை அவங்களுக்கு பெரிய பேரழிவை கொண்டு வரணும் தெரியாம போச்சு.

உத்தரபிரதேச மாநிலம் குணா மாவட்டம் கேண்ட் பகுதியில் இருந்தது அந்த நிலம். மண்டல மாஜிஸ்ட்ரேட் தலைமையில் போலீசார் புடை சூழ சென்ற அதிகாரிகள் குழுவினர் ராஜ்குமாரின் பயிர்களை புல்டோசர் மூலம் அழிக்க ஆரம்பித்தனர். அதிகாரிகளின் மொழியில் இந்த செயலுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என்று பெயர். தடுத்த ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர். குழந்தைகள் கண் முன்பே பெற்றோர்கள் அடித்து நொறுக்கப் பட்டனர். பாவம் குழந்தைகளுக்கு வாய்விட்டு அழுவதைத் தவிர, நடக்கின்ற அநியாயத்தை தடுக்க வழி ஏதும் தெரியவில்லை. போலீசாரின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ராஜ்குமாரின் 7 மாத குழந்தை கூட தப்பவில்லை என்று கூறப்படுகிறது.

புல்டோசரில் சிக்கிய பயிர்களை போலானது ராஜ்குமார் குடும்பம். விவசாயத்திற்கு வாங்கிய கடனும் வட்டியும் கண்முன் தெரிய… எதிர்காலம் இருளாய் மாற… வாழ்வதற்கு மாற்று வழி தெரியாத காரணத்தினால் ராஜ்குமாரும் அவரது மனைவியும் பயிர்களுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விடுகின்றனர். சிறிது நேரத்தில் மயங்கியும் விழுகின்றனர். சட்டத்தின் காவலர்களுக்கு ஏழை விவசாயி பற்றி கவலை எதற்கு?.. அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன பிறகு தான் அரசு இயந்திரம் நடவடிக்கை எடுத்தது. குணா மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் தலைமை அதிகாரி இவர்களை இடமாற்றம் செய்து உத்தரவு இட்டார் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.


Share this:

Related posts

கேரள முதல்வரையே மிரள வைத்த கோமதி… ‘சிங்கிள்’ஆளாக ஜெயித்த சிங்கப்பெண்…!!

MANIMARAN M

நதிநீர் பங்கீடு: கேரள – தமிழக அரசுகள் இடையே முக்கிய ஆலோசனை…!!

MANIMARAN M

நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பாதீர்கள்… ராகுல் காந்தியை மறைமுகமாக எச்சரித்த பிரதமர்…!

NEWSKADAI

மத்திய அரசின் இந்த திட்டத்தில் நீங்களும் மாதம் ரூ.3 ஆயிரம் பெறலாம்… வழிமுறைகள் உள்ளே…!!

THAVAMANI NATARAJAN

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… இந்தியாவிலும் நிறுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி பரிசோதனை…!!

MANIMARAN M

அதிர்ச்சி… கொரோனா தொற்றுக்கு பெண் அமைச்சர் உயிரிழப்பு…!!

AMARA