Newskadai.com
தமிழ்நாடு

காதலுக்கு எதிர்ப்பு?… தற்கொலை செய்து கொண்ட காதலியின் சடலத்துடன் உடன்கட்டை ஏறிய காதலன்…!

Share this:

தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் தற்கொலை சம்பவங்கள் ஏராளம் அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்திற்கு மூன்று மகள்கள். அவரின் மூத்த மகள் நித்யஸ்ரீ செவிலியர் படிப்பு படித்துவந்துள்ளார். கல்லூரிகள் திறக்காத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடந்துவருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் படிப்பதற்காக செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் செல்போன் பயன்படுத்துவதற்கு மூன்று சகோதிகளுக்குகிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நித்யஸ்ரீ கடந்த 29ம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த மாணவி நித்யஸ்ரீயின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிறகு அவரின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேட்டுநன்னாவரம் கிராமத்திலுள்ள இடுகாட்டில் நித்யஸ்ரீயின் உடல் தகனமும் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களக்கு முன்பு மேட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் திருநாவலூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 31 ம் தேதி இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற தனது மகன் ராமுவைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் நித்யஸ்ரீயின் உடல் எரிக்கப்பட்ட அன்று இரவு இடுக்காட்டுக்குச் சென்றதாக தனது மகனின் நண்பர்கள் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி விஜிகுமார், மாவட்ட தடயவியல் நிபுணர் ராஜி, திருநாவலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி உட்பட காவலர்கள் நேற்று முன்தினம் மாலை நித்யஸ்ரீயின் சடலம் எரிக்கப்பட்ட சுடுகாட்டுக்குச் சென்றனர். அங்கு எரிந்துகிடந்த சாம்பலுக்குள், கருகியநிலையில் கிடந்த ஒரு வாட்ச், செல்போன், உதிரி பாகங்கள் மற்றும் எழும்புகளைக் கைப்பற்றினர்  போலீசார்.

கைப்பற்றப்பட்ட தடயங்களை ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். பிறகு காவலரின் விசாரணையில் நித்யஸ்ரீயின் பெற்றோர் தனது மகள் செல்போனுக்காக எலி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் முதற்கட்ட விசாரணையில் நித்யஸ்ரீயிடமிருந்து அவரின் தந்தை செல்போனைப் வாங்கியதால் தான் தற்கொலை செய்துகொண்டார் என்ற உண்மை வெளியாகியுள்ளது.

மேலும் உயிரிழந்த நித்யஸ்ரீயும் ராமுவும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமு நித்யஸ்ரீ இறந்த செய்தியை அறிந்து கொண்டதற்கு பின் தன் உயிரை மாய்த்து கொள்வதாக தன் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ராமு நித்யஸ்ரீயின் சடலம் எரிந்துகொண்டிருக்கும் தீயில் விழுந்திருக்கலாம் என்று காவலர் சந்தேகிக்கின்றனர். உடல் எரிந்து கொண்டிருக்கையில் ‘ஐயோ’, ‘வலிக்குது’ என்று அலறிய சத்தம் கேட்டு அங்கு இருந்த எட்டு பணியாளர்களும் பயத்தில் வீட்டுக்குச் சென்றுவிட்டதாக விசரணையில் கூறியிருக்கிறார்கள்.

உடல் எரிந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வாட்ச் தனது மகனுடையது தான் என்று ராமுவின் தந்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். இது குறித்து பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள் போலீசார்.


Share this:

Related posts

வாழ்த்துக்கள் டீச்சர்: நல்லாசிரியர் விருதினை பெரும் திருப்பூர் மாவட்ட பெண் ஆசிரியர்கள்

MANIMARAN M

ஆசிரியர் தகுதி தேர்வில் திடீர் திருப்பம் .. அன்புமணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பதில்..!!

THAVAMANI NATARAJAN

மதுரையில இதெல்லாம் சாதாரணம்ப்பு… இது மூணாவதப்பு…

THAVAMANI NATARAJAN

இப்படியே போனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது… எச்சரிக்கும் வைகோ…!

NEWSKADAI

கட்டுபாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை : தமிழக அரசின் அவசர சட்டம்…

MANIMARAN M

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

MANIMARAN M