Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் – ஆசிரியர்கள் மீது குவியும் பாலியல் புகார்கள்

Share this:

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்த போலீசார் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்தனர். வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளும் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்களை கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆன்லைன்’ வகுப்பின் போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சென்னை கே.கே.நகரை சேர்ந்த பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (வயது 59) கைது செய்யப்பட்டார். பத்ம சேஷாத்திரி பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரா, முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோருக்கு போலீசார்  சம்மன் அனுப்பியதுடன் 25ம் தேதி சென்னை அசோக்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அங்கு அவரிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, தியாகராயர்நகர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

2வது நாளாக தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. இந்த விசாரணையின்போது, ‘ஆசிரியர் ராஜகோபாலன் மீது ஏற்கனவே எத்தனை மாணவிகள், பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்?. அந்த புகாரின் பேரில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த புகார்கள் குறித்து போலீசார் கவனத்துக்கு கொண்டு வராதது ஏன்? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை காவல்துறை அதிகாரிகள் எழுப்பினர்.

பெரும்பாலான கேள்விகளுக்கு பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜனின் பதில் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சைகளுக்கு இடையே, ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் அதனை பதிவு (Record) செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு வீடியோக்களை அவ்வப்போது பெற்றோர் ஆசியர் சங்கத்தின் மூலமாக கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் கண்ணியம் தவறும் வகையில் நடந்துகொள்ளும் பட்சத்தில், அவர்களின் மீது கட்டாயம் போக்ஸோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

30க்கும் மேற்பட்ட வேறுசில பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகளும், பெற்றோரும் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


Share this:

Related posts

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M

ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்…! மு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சுதந்திர தின வாழ்த்து செய்தி…

MANIMARAN M

“இன்னோவா அல்ல.. ஏரோப்ளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது”… எல். முருகனை எள்ளி நகையாடிய நாஞ்சில் சம்பத்…!!

AMARA

கட்சிபாகுபாடியின்றி அடித்து தூக்கிய மு.க.ஸ்டாலின்… மட்டற்ற மகிழ்ச்சியில் பிரேமலதா, டிடிவி…!

NEWSKADAI

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

ஐ.டி.ரெய்டு: உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல்?

AMARA