Newskadai.com
லைஃப் ஸ்டைல்

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

Share this:

வரம் தரும் விரதங்களில் பிரதானமாக விளங்குவது சங்கடஹர சதுர்த்தி விரதமாகும்.

சங்கடஹர சதுர்த்தியின் சிறப்புகள்

சங்கடஹர சதுர்த்தி என்பது சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தியாகும், சந்திரன் தன் அழகில் கர்வம் கொண்டு விநாயகரை அவமதித்ததாகவும் கோபம் கொண்ட விநாயகர் சந்திரனுக்கு சாபமிட்டதாகவும், சாப விமோசனத்திற்காக சந்திரன் விரதமிருந்து விநாயகரை வணங்கியதால் சாப விமோசனம் கிடைத்தது என்றும் சந்திரன் விரதமிருந்த நாள் சங்கடஹர சதுர்த்தி எனவும் கூறப்படுகிறது. அதனால் சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்தால் சங்கடங்களை தீர்த்துவைப்பார் என்பது ஐதீகம்.

ganapathi விரதமிருக்க வேண்டிய முறைகள்

  • காலையில் தலைக்கு குளிக்க வேண்டும் (எண்ணை தேய்த்து குளிக்க கூடாது).
  • விநாயகர் உருவ படம் அல்லது மஞ்சலில் பிள்ளையார் பிடித்து அதற்கு தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு வைத்து நெய்வேத்தியம் செய்து விரதத்தை துவங்க வேண்டும்.
  • அன்று முழுவதும் விநாயகர் அகவல் படிப்பது, விநாயகர் துதி பாடி வருவது சிறப்பாகும்.
  • மாலையில் சந்திர உதயத்திற்கு பின்பு ஒருபடி நெல் மற்றும் பால் பொங்கல் வைத்து நெய்விழக்கேற்றி சந்தினை வழிபட வேண்டும்.
  • அதன் பின்பு அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று அபிஷேகம் பார்க்க வேண்டும்.
  • விநாயகர் கோவிலுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக அருகம்புள் எடுத்து செல்ல வேண்டும்.
  • அபிஷேகம் முடிந்த பின் தங்களுடைய பெயர், ராசி, நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்துகொள்ள வேண்டும். சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்ய கூடாது.
  • பின்பு வீட்டிற்கு வந்தவுடன் விநாயகருக்கு சாதத்தில் நெய்விட்டு நெய்வேத்தியம் செய்து விரதத்தை முடித்து கொள்ள வேண்டும்
  • விரதமிருக்கும் பெண்கள் கண்டிப்பாக அன்று இரவு உணவருந்திவிட்டு தூங்க வேண்டும். உண்ணாமல் தூங்கினால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் இல்லாமல் செய்து விடும்.

ganapathi

மேலும் படிக்க : http://நல்ல காரியங்கள் நடக்கும்… கண்பியூசே வேணாம், கரண்ட்கிட்ட கவனம் தேவை..!! இன்றைய ராசி பலன்கள்…

எந்த விரதம் என்ன நலன்களை தரும்

  • சங்கடங்களை தீர்த்து வைக்கப்படும்
  • எந்த தடைகளும் இருக்காது
  • மன நலம் குன்றியவர்களுக்கும், மன குழப்பத்தில் உள்ளவர்களுக்கு அந்த குறையை தீர்த்து வைப்பார்.
  • சந்திர தோசங்கள் நீங்கும்.

இந்த விரதத்தை  எப்போது துவங்க வேண்டும்

விநாயகர் சதுர்த்திக்கு முன்தாக வரும் சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி ஆகும், அன்று இவ்விரதத்தை துவங்கி ஒவ்வொரு மாத சங்கடஹர சதுர்த்தி அன்றும் விரதமிருக்க வேண்டும், அதன்படி 12 மாதங்களில் 12 சங்கடஹர சதுர்த்திகளில் விரதமிருந்து 13 வது  சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும். மகா சங்கடஹர சதுர்த்தி அன்று என்ன வேண்டுதலுக்காக விரதத்தை துவங்கினார்களோ அந்த வேண்டுதல்கள் நிவிர்த்தி அடையும் என்பது ஐதீகம்.


Share this:

Related posts

அப்படி என்ன தான் இருக்கு கும்பகோணத்தில் வாங்க பார்க்கலாம்…!!

AMARA

திடீரென உயர்ந்த தங்கம் விலை… ஒரு நாளுக்குள் இவ்வளவு விலை கூடிபோச்சே…!!

NEWSKADAI

நடுத்தரவாசிகளை நடு நடுங்க வைத்த தங்கம் விலை… இன்றைய விலை என்ன..!?

AMARA

“தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே”… தங்கத்தை பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்…!

NEWSKADAI

சேமிக்கிற காசை டபுளாக்க இப்படியெல்லாம் வழியிருக்கா?… இதுவரைக்கும் இதெல்லாம் தெரியாமல் போச்சே…!

NEWSKADAI

வாயை விட்டு மாட்டிக்காதீங்க, பொண்டாட்டி பேச்ச கொஞ்சமாவது கேளுங்க… தெறிக்கவிடும் இன்றைய ராசி பலன்கள்…!!

THAVAMANI NATARAJAN