Newskadai.com
அரசியல்

ஊரடங்கு நீட்டிப்பா?… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை…!

Share this:

தமிழகத்தில் கொரோனாவின் கோரப்பிடி நாளுக்கு நாள் இறுகி வருகிறது. இதனால் கடந்த மார்ச் 25ம் தேதி முதலே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் போது, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் பின்னர் இ-பாஸில் இருந்த சிக்கல்களை தீர்க்கும் விதமாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பையும் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

ஆகஸ்ட் 31ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளா நிலையில், அனைத்தூ மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலகாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே இ-பாஸ் நடைமுறையால் அதிகரித்து வரும் மக்களின் நடமாட்டம் கொரோனா தொற்றை அதிகரிக்க கூடும் என்பதால், தலைமைச்செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் முதலமைச்சர் பழனிசாமி, பிற்பகலில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த இரு கூட்டங்களுக்குப் பிறகும் செப்டம்பர் மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால் எவ்வித தளர்வுகளை அறிவிக்க வேண்டும் போன்ற விஷயங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this:

Related posts

கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு குட்நியூஸ்… தமிழக அரசின் அசத்தல் அனுமதி…!

NEWSKADAI

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம்… தமிழக அரசுக்கு அதிரடி யோசனை கொடுத்த ராமதாஸ்…!

NEWSKADAI

பாஜக, திமுக என பாரபட்சம் பார்க்காமல் பாயும் வழக்கு… லாக்டவுனில் கூடி கும்மாளம் போட்டால் அடித்து தூள் கிளப்பும் அதிமுக அரசு….!

AMARA

“பாஜகவில் இணையவில்லை”… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அதிரடி விளக்கம்…!

AMARA

திமுகவின் முக்கிய பொறுப்பு யாருக்கு?

THAVAMANI NATARAJAN

ரெடியா..? இன்று முதல் ரூ.2,000 பெறலாம் – மேலும் 13 பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது

AFRIN