Newskadai.com
தமிழ்நாடு

நாகையில் அர்ச்சகர் வீட்டில் அரங்கேறிய கொள்ளை… 40 சவரன் நகைகள் திருட்டு…!!

Share this:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே கோவில் அர்ச்சகர் வீட்டில் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கீழ்வேளூர் அருகே உள்ள அரசாணிகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவில் அர்ச்சகரான கணேஷ்குமார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அர்ச்சகர கணேஷ்குமார் தனது குடும்பத்துடன் திருக்கண்ணங்குடியில் உள்ள தந்தைக்கு வீட்டிற்கு சென்றுள்ளார். ஒரு நாள் தந்தை வீட்டில் தங்கிவிட்டு நேற்று வீடு திரும்பிய கணேஷ்குமார் தனது வீட்டின் வாசல் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

வீட்டின் உள்ளே சென்றவருக்கு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளானார். நகை கொள்ளைப் போன சம்பவம் குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரிபேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். நாகப்பட்டினத்திலிருந்து மோப்ப நாய் வரவழைக்கபட்டது. கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அரசாணி குளம், தெற்கு வீதி வழியாக சென்ற மோப்ப நாய் அங்குள்ள மெக்கானிக் கடை அருகே நின்றுவிட்டது.

மேலும் தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த அர்ச்சகரின் வீட்டில் தடயங்களை பதிவு செய்தனர். 40 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனது எனவும், அதன் மொத்த மதிப்பு ரூ.14½ லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து கீழ்வேளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.


Share this:

Related posts

மின்சாரம் தாக்கி இறந்த யானையையும் விட்டு வைக்காத கயவர்கள்… ஊட்டியில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

NEWSKADAI

மீனாட்சி!.. மீனாட்சி!!… என்னாச்சு!?.. என்னாச்சு!!?… கைலாசா நாட்டு நாணயம் வந்தாச்சு..!!

THAVAMANI NATARAJAN

சேலத்தை அடித்து நொறுக்கிய பேய் மழை… வீடுகளை சூழ்ந்த வெள்ள நீரால் மக்கள் அவதி…!!

THAVAMANI NATARAJAN

ஐ.டி.ரெய்டு: உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல்?

AMARA

ஒரே ஆண்டில் 2வது முறை… அடித்து தூக்கிய மேட்டூர் அணை…!!

THAVAMANI NATARAJAN

கரூரில் நடந்த கொடூரம்: காரில் பயணித்த புதுமண தம்பதி விபத்தில் உயிரிழப்பு…!!

THAVAMANI NATARAJAN