தொலைதொடர்பு நிறுவனங்களான வோடபோன், ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறைக்கு உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உட்பட ரூ.1,47,000 கோடி தொகையை செலுத்த வேண்டியுள்ளது. அந்த பாக்கியை செலுத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த வருடம் அக்டோபர் 24ம் தேதி உத்தரவிட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உத்தரவை மீறி செயல்பட்டதால் மத்திய தொலைத் தொடர்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ப்பட்டது. கோர்ட் அளித்த தீர்பபானது மேல் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக்கட்டணம், அலைக்கற்றை கட்டணம் ஆகியவற்றின் பாக்கி தொகையை செலுத்துவதற்கு 10 ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது.

நிறுவனங்கள் தங்கள் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையின் 10 சதவீதத்தை 2021 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் கட்ட வேண்டும் மற்றும் 2031 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும். நிலுவை தொகையின் தவணையை செலுத்தவில்லை எனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அபராதம், வட்டி செலுத்தவும், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டி ஏர்டெல் நிறுவனம் கிடைக்கும் சராசரி வருவாயை அதிகரிக்க 10 சதவீதமாகவும், வோடபோன், ஐடியா 27 சதவீதமாகவும், உயர்த்த நேரிடும் . இதனால் ரீச்சார்ஜ் கட்டணங்கள் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இண்டர்நெட் டேட்டா பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளதால் இதை சமாளிக்க நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்தும் சராசரியாக ரூ.200 முதல் ரூ.300 வருவாய் கிடைக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் நெருக்கடி தரும் வகையில் தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ், ஜியோ தங்களின் சலுகைகளை பயனாளர்களுக்கு தேவையான அளவுக்கு அளிப்பதால் பயனாளர்களும் ரிலையன்ஸ், ஜியோ தொலைதொடர்புகளையே அதிக அளவு விரும்புகிறார்கள்.

இதனால் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற தொலைத் தொடர்பு துறைகள் தங்களுக்கு நேரிடும் நெருக்கடியை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள். ரீச்சார்ஜ் கட்டணத்தை அதிகப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் வேறு சேவைக்கு மாறிவிடுவார்கள் ஆகையால் குறைந்த கட்டணத்தில் சேவை செய்து வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எந்த பாதையில் செல்வதென திக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.