Newskadai.com
உலகம்

மக்களால் நான்… மக்களுக்காக நான்… பதவி விலகிய பிரதமர்…

Share this:

லெபனானின் பெய்ரூட் நகர துறைமுகத்தில் பல ஆண்டுகளாக வைத்திருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் எதிர்பாராத தீ விபத்தின் காரணமாக வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்து லெபனானை மட்டுமல்ல உலகையே உலுக்கியது. பெய்ரூட் துறைமுகம் சுக்குநூறாக சிதைந்தது. சில நிமிடங்களில் பல லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை, வாழ்வாதாரங்களை இழந்தனர். இறந்தோர் எண்ணிக்கை சில நூறு.

தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் பல இடங்களில் கலவரமாக மாறியது. அரசு துறை அலுவலகங்கள் குறி வைத்து சேதப்படுத்தப்பட்டன. காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடுமையான மோதல்கள் கடந்த 6 நாட்களாக நடந்தேறி வருகின்றன. ஆளும் அரசு அலட்சியம் மற்றும் ஊழல் காரணமாகவே இந்த வெடி விபத்து நடந்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அரசுக்கு எதிராக பெருகி வரும் போராட்டம் குறித்து லெபனான் பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூடி விவாதித்தது. நடந்த வெடி விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று தனது தலைமையிலான அரசு கூண்டோடு பதவி விலகுவதாக பிரதமர் ஹசன் டியாப் அறிவித்துள்ளார். லெபனானில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Share this:

Related posts

ஹேப்பி நியூஸ்: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – வெளியானது அசத்தல் அறிவிப்பு

MANIMARAN M

ஆத்தாடி எவ்வளவு பெரிசு… இப்படியொரு ராட்சத வவ்வால்களை பார்த்திருக்கமாட்டீங்க…!

NEWSKADAI

“ட்ரம்பின் அப்பனுக்கே அது தெரியாது”… அமெரிக்க அதிபரின் முகத்திரையை கிழித்த அண்ணன் மகள்…!

NEWSKADAI

தியாகத் திருநாள்… நிபந்தனையற்ற அன்பு செய்வோம் வாருங்கள்…

MANIMARAN M

அமெரிக்காவுக்கே இந்த நிலையா?…. ஆன்லைன் கல்விக்காக ஓட்டல் வாசலில் தவம் கிடக்கும் சிறுவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

மிக குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்து… உலகின் முன்னணி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M