Newskadai.com
அரசியல் இந்தியா

நற்செய்தி..! தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்

Share this:

கொரோனா வைரஸுக்கு எதிரான தண்ணீரில் கலந்து குடிக்கும் தடுப்பு மருந்து நாட்டிலேயே முதல் முறையாக தலைநகர் டெல்லியில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கோர தாண்டவம் எடுத்து வரும் நிலையில் தடுப்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும் அதைவிட வேகமாக தினசரி வைரஸ் பாதிப்பு ஏற்படுவதால் கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் தவித்து வருகின்றன. இந்த நிலையில் தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள டிஆர்டிஓ மருந்து, கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது தெரிய வந்துள்ளது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கொனாரோவுக்கு எதிரான 2-டிஜி என்ற மருந்தை தயாரித்துள்ளது. வாய்வழியாக உட்கொள்ளும் வகையில் பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கவேண்டும். இந்த மருந்தானது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. இதுமட்டுமின்றி, கொரோனா நோயாளிகள் ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலையும் குறைகிறது என பரிசோதனைகளில் நிரூபணமாகி உள்ளது.

இந்த சூழலில், அவசரகால தேவைக்கு 2-டிஜி மருந்தை பயன்படுத்தலாம் என மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்ததுடன் 2-டிஜி மருந்து டெல்லியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மருந்தை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். முதல்கட்டமாக 10000 மருந்து பாக்கெட்டுகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்த மருந்துகள் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளன.


Share this:

Related posts

பாஜக நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்… தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு…!

NEWSKADAI

29 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் கால் வைத்தார் பிரதமர் மோடி… மகிழ்ச்சியில் இந்துக்கள்…!!

NEWSKADAI

கொரோனா ஊரடங்கும், தளர்வுகளும் – இயல்புநிலைக்கு திரும்புகிறதா தமிழகம்..?

AFRIN

ஊரடங்கு நீட்டிப்பு… உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

NEWSKADAI

மாலை நேரத்தில் வந்த நல்ல செய்தி… இனி இ-பாஸ் தேவையில்லை… மத்திய அரசு அதிரடி…!!

NEWSKADAI

அதிர்ச்சி…! காற்றில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

AFRIN