Newskadai.com
சினிமா

பிறந்தநாளில் “நெற்றிக்கண்”ணை திறந்த நயன்தாரா… விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத பர்த்டே ட்ரீட்…!

Nayanthara
Share this:

தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நம்பர் ஒன் நடிகையாக நடிகை நயன்தாரா வலம் வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அழைக்கும் அளவிற்கு உயர்ந்துள்ள நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அறம், டோரா, கோலமாவு கோகிலா, ஐரா என அடுத்தடுத்து ஹீரோயின்கள் கதையில் நடித்து வருகிறார்.

  

தீபாவளி ட்ரீட்டாக நயன்தாரா முதன் முறையாக அம்மன் கெட்டப்பில் நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சக்கப்போடு போட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நயன்தாரா, ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட் ஒன்றை கொடுத்துள்ளார். காதலர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் முதன் முறையாக தயாரித்துள்ள நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இதில் கண்பார்வையற்ற பெண்ணாக நயன் நடிப்பில் வேற லெவலுக்கு வெளுத்து வாங்கியுள்ளார்.

டீசரைப் பார்க்கும் போதே ஏதோ ஒரு சைக்கோ கொலைகாரனுக்கும், கண்பார்வையற்ற நயன்தாராவிற்கும் இடையிலான ஆடு, புலி ஆட்டம் தான் கதை என்பது தெரியவருகிறது. டீசர் வீடியோ இதோ…

 


Share this:

Related posts

எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….!!

NEWSKADAI

“எஸ்.பி.பி. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்”… மகன் சரண் வெளியிட்ட வீடியோ…!!

AMARA

“எஸ்.பி.பி. விழிப்புடன் நல்ல நிலையில் இருக்கிறார்”… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை…!!

NEWSKADAI

பிக்பாஸ் வீட்டிற்குள் கதறி அழுத அனிதா சம்பத்… வைரல் வீடியோ…!

NEWSKADAI

இந்த வயசில த்ரிஷாவுக்கு இப்படியொரு ஆசையாம்… கல்யாண கனவை கேட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்…!

THAVAMANI NATARAJAN

காதல் டூ கண்மணி…. சின்னத்திரை மூலம் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்க போகும் பிரபல நடிகை…!!

THAVAMANI NATARAJAN