தமிழ் திரையுலகில் லேடி சூப்பஸ்டார் யார் என்று தெரியாதவர்கள் யாரும் இல்லை, அந்த அளவிற்கு பிரபலமாகி தமிழ் திரையுலகை அசத்தி வருகிறார் நயன்தாரா. இன்றைய நடிகைகளுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்கிறார். தனக்கான இடத்தை எப்பவும் தக்கவைத்துக்கொள்கிறார்.
மற்ற நடிகைகளை போல் இல்லாமல் தான் நடிக்கும் படங்களில் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடித்துவருகிறார். விரைவில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக உள்ள நயன்தாரா, , “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது போல் வரும் வாய்ப்புகளை எல்லாம் சாதகமாக பயன்படுத்தி வருகிறார்.சமீபத்தில் அதனால் தான் உஜாலா விளம்பரம் வரை நடித்தார். தற்போது அம்மணி கைவசம் “அண்ணாத்த”, ”காத்து வாக்குல இரண்டு காதல்”, நெற்றிக்கண் என படவாய்ப்புகள் உள்ளன. முதன் முறையாக அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படமும் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது.
தற்போது தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு தேடிவந்துள்ளது. அந்தாதுன் என்ற ஹிந்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர். தெலுங்கில் ஹீரோவாக நிதின் நடிக்க உள்ளார். ஹிந்தி படத்தில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை கேட்டுள்ளனர். ஆனால் அவர் அதிக அளவு சம்பளம் கேட்பதால் படக்குழுவினர் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த படம் ஹிந்தியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும், இந்த படித்தில் நடித்த ஆயுஷ்மன் குரானாவுக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியுள்ளார். அந்த படத்தை மோகன் ராஜா இயக்க, தனது மகன் பிரசாந்தை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.