Newskadai.com
தமிழ்நாடு

கோவிலுக்குள் கொன்று புதைப்பட்ட இளைஞர் சடலம்… கள்ளக் காதலால் அர்ச்சகர் செய்த கொடூரம்…!!

Share this:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கொலை செய்து கோவில் வளாகத்திலேயே உடலை புதைத்த அர்ச்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்ருட்டி படைவீட்டு அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மஞ்சுளா. இவர் கணவனை பிரிந்து அதே ஊரை சேர்ந்த கண்ணதாசன் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியில் உள்ள வேணுகோபால் சாமி கோவிலில் அர்ச்சகராக இருப்பவர் கோபிநாத். இவர் ஜோதிடத் தொழிலும் செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சுளா அர்ச்சகர் கோபி நாத்திடம் உதவியாளராக பணிக்கு சேர்ந்துள்ளார். பணியில் இருந்த பொழுது அர்ச்சகருக்கும் மஞ்சுளாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கண்ணதாசன் கோபிநாத்தை கண்டித்துள்ளார். மஞ்சுளா உடனான உறவில் தடையாக இருக்கும் கண்ணதாசனை ஒரு சில நண்பர்களுடன் சேர்ந்து அர்ச்சகர் கோபிநாத் கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட கண்ணதாசனின் உடலை கோவில் வளாகத்தில் புதைத்துள்ளார்.

கண்ணதாசனை காணவில்லை என்று மஞ்சுளா பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி காவல் அதிகாரிகள் அர்ச்சகர் கோபிநாத்திடம் விசாரணை செய்தனர். அதில் அவர் தான் கண்ணதாசனை கொலை செய்து கோயில் வளாகத்தில் புதைத்து விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு உடந்தையாக மஞ்சுளாவும் செயல்பட்டுள்ளது தெரியவந்ததை தொடர்ந்து அர்ச்சகர் கோபிநாத் மற்றும் மஞ்சுளாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் பண்ருட்டி தாசில்தார் முன்னிலையில் கோவிலில் புதைக்கப்பட்ட கண்ணதாசனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை தொடர்பில் கோபிநாத்தின் நண்பர்களையும் தேடி வருகின்றனர் காவல்துறையினர்.


Share this:

Related posts

“பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரங்களில் முடிவு”… அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்…!

NEWSKADAI

நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

கொரோனா வரமா?… சாபமா…? கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

NEWSKADAI

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

THAVAMANI NATARAJAN

முதல்வர் தொகுதியில் தலைவிரித்தாடும் கொரோனா… கிடா விருந்தில் பங்கேற்ற 150 பேருக்கு தொற்று??

THAVAMANI NATARAJAN

கொரோனா ஊரடங்கும், தளர்வுகளும் – இயல்புநிலைக்கு திரும்புகிறதா தமிழகம்..?

AFRIN