Newskadai.com
அரசியல்

#BREAKING காலையில் காங்கிரஸில் இருந்து விலகல்…. பிற்பகலில் பாஜகவில் இணைவு… குஷ்பு அதிரடி…!

kushboo joint bjp
Share this:

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விலகிய குஷ்பு. இன்று டெல்லியில் பாஜகவின் தேசிய செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வந்த குஷ்பு, பாஜகவில் இணைய உள்ளதாகவும் அதற்கான திரைமறைவு பேரம் நடைபெற்று வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அதனை குஷ்பு தொடர்ந்து மறுத்து வந்தார்.

Kushboo join bjp

இந்நிலையில் நேற்று குஷ்பு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது கூட சென்னை விமான நிலையத்தில் வைத்து குஷ்புவிடம் நீங்கள் பாஜகவில் இணையப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆனால் இன்று நிச்சயம் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் குஷ்பு இணைவு விழா நடக்க உள்ளதாக நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் மூலமாக செய்திகள் கசிந்தன.

Kushboo

அதை உறுதிபடுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை நீக்கியுள்ளது. கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே குஷ்பு கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்திக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பணத்திற்காகவே, புகழுக்காகவே நான் கட்சியில்  இணையவில்லை என்றும், கட்சியின் நலனுக்காக உழைக்கும் தன்னைப் போன்றோர் ஒடுக்கப்படுவதாகவும், அதனால் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கட்சியில் இருந்து விலக முடிவெடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

சற்று நேரத்திற்கு முன்பு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் பி.டி.ரவி முன்னிலை குஷ்பு பாஜகவில் இணைந்தார். நாடு முன்னேற்றப்பாதையில் பயணிக்க மோடி போன்ற தலைவர் தேவை என்பதை உணர்ந்து கொண்டதாகவும், தமிழகத்தில் பாஜகவின் அடிமட்ட தொண்டராக செயல்பட உள்ளதாகவும் குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

“எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை”… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு…!

AMARA

ஒரே ஒரு போன்கால்…. அலறியடித்துக் கொண்டு கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்குள் நுழைந்த போலீசார்…!

AMARA

“திமுக தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ”… ஸ்டாலினை சீண்டும் எல்.முருகன்…!

MANIMARAN M

எம்.ஜி.ஆர். குடும்பத்தில் ‘கொரோனா’ மரணம்… சோகத்தில் துடிதுடிக்கும் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ்…!

AMARA

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI