Newskadai.com
அரசியல்

“பூனைக்குட்டி வெளியே வந்தது”… ஒத்த ட்வீட்டில் உண்மையை உளறிய குஷ்பு… சற்று நேரத்தில் பாஜகவில் சங்கமம்??

Kushboo join bjp
Share this:

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் பரவி வருகின்றன. இது வதந்தி என மறுத்து வந்த குஷ்பு கடந்த வாரம் டெல்லி சென்று வந்தார். ராகுல் காந்தியுடன் பேசும் அளவுக்கு செல்வாக்குப் பெற்ற குஷ்புவுக்கு காங்கிரஸில் செய்தி தொடர்பாளர் பதவி கிடைத்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட குஷ்பு வாய்ப்பு கேட்டதாகவும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக போட்டியிட வாய்ப்பு வழங்கபடவில்லை என்றும் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பின்றியும், கட்சியில் பெரிய பதவி ஏதுமின்றியும் அதிருப்தியில் இருந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலக முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாஜக தங்கள் கட்சியில் இணைய பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், பாஜகவில் அவருக்கு கவுரவமான பதவி வழங்கப்படும், மேலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டதினால் குஷ்பு பாஜகவில் இணைய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “பலர் என்னிடம் ஒரு மாற்றத்தை பார்க்கின்றனர். வயதிற்கு ஏற்ப நமது வளர்ச்சியும் மாற்றமும் இருக்கும். கற்றவை மற்றும் கற்காதவை, உணர்வுகளின் மாற்றம், பிடித்தவை மற்றும் பிடிக்காதவை, எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் ஆகியவை ஒரு புதிய வடிவத்தைக் கொடுக்கும். கனவுகள் புதியவை.

லைக்குக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் இருப்பதை போல, சரிக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது” என்ற கருத்துகளோடு காவி நிறத்தில் உடையணிந்த தனது புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் கணவர் சுந்தர்.சியுடன் டெல்லி சென்றுள்ள குஷ்பு இன்று பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this:

Related posts

“மாஸ்” காட்டிய திமுக மகளிரணி..!!! கைது செய்யப்பட்ட கனிமொழி..!!!

MANIMARAN M

திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடி, ஆ.ராசா நியமனம்…. 3ல் இருந்து 5 ஆக உயர்வு…!!

AMARA

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?… கருத்துக்கணிப்புகளில் முதலிடம் பிடிக்கும் ஓ.பி.எஸ்….!

AMARA

#BREAKING காலையில் காங்கிரஸில் இருந்து விலகல்…. பிற்பகலில் பாஜகவில் இணைவு… குஷ்பு அதிரடி…!

AMARA

மோடி திட்டத்தில் மோசடி: கிருஷ்ணகிரியில் இதுவரை ரூ.1.76கோடி மீட்பு…!!

NEWSKADAI

“மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்குவோம்”… திமுக பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!

NEWSKADAI