Newskadai.com
தமிழ்நாடு

கொரோனாவில் கொண்டாட்டம்: கறிவிருந்து வைத்து கூத்தடித்த வட்டாட்சியருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்…!!

Share this:

காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் வட்டாட்சியர் பொறுப்பில் இருப்பவர் ஜெயசித்ரா. கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று மீண்டு வந்திருந்தார். அரசு அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வட்டாட்சியர் ஜெயசித்ராவிற்கு பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறப்பு விருதினை அளித்தார்.

 

 

சிறப்பு விருது பெற்ற வட்டாட்சியர் ஜெயசித்ரா அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட சக பணியாளர்களுக்கு விருந்துக் கொடுக்க முடிவு செய்து பொதுப்பணித்துறை விடுதியில் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டு தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசின் உத்தரவையும் மீறி, வட்டாட்சியர் ஜெயசித்ரா கறி விருத்து வைத்துள்ளார். இதில் குன்றத்தூர் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டு வட்டாட்சியர் ஜெயசித்ராவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

 

 

பின்னர் தடபுடலாக கறி விருந்து நடைபெற்றுள்ளது. வட்டாட்சியர் நடத்திய கறிவிருந்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையறிந்த மாவட்ட நிர்வாகம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியது. இதில் வட்டாட்சியர் ஜெயசித்ரா தமிழக அரசின் உத்தரவை மீறி கூட்டம் கூட்டியது உறுதியானது. இதனால வட்டாட்சியர் ஜெயசித்ராவை பணியிட மாற்றம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Share this:

Related posts

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

MANIMARAN M

அமைச்சர் ஓ எஸ் மணியன் மனைவி உடல் நலக்குறைவால் மரணம்…

MANIMARAN M

செப்.17ல் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு… அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு…!!

MANIMARAN M

சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி… ஆட்சியர் சீதாலட்சுமிக்கு உறுதியானது கொரோனா தொற்று….!!

NEWSKADAI

8-வது படித்திருந்தால் போதும்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்கலாம்..!

AFRIN

மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் போல… தலை சுற்ற வைக்கும் பிஎஸ்பிபி பள்ளி பேக்ரவுண்ட்…!

NEWSKADAI