கடந்த பல ஆண்டுகளாக தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கக் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும், பல போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கடந்த ஆண்டுகளில், கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் செங்கல்பட்டு என புதிய மாவட்டங்களை பிரித்து அறிவித்தது.
இதை தொடர்ந்து கும்பகோணம் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறார்கள் இதன் தொடர்ச்சியாக கும்பகோணத்தையும் தனி மாவட்டமாக உருவாக்கும் கோரிக்கை வலுத்து வந்த நிலையில் பெண்கள் நூதனமான முறையில் போராட்டத்தை நடத்தினர்.
செப் 1ம் தேதி அன்று கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை பேருந்து நிலையத்தில் மலர்களால் வேண்டும்… வேண்டும்… கும்பகோணம் மாவட்டம்… வேண்டும்… என்று எழுதி பூ கோலமிட்டு அப்பகுதி பெண்கள், சிறுமிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இப்போரட்டத்தில் புதிய மாவட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின், கோ.வி.செழியன்.எம்.எல்.ஏ, தி.மு.க. நகர செயலாளர் இளங்கோவன், பா.ம.க முன்னால் மாவட்ட தலைவர் குமார், அ.ம.மு.க திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், ஆடுதுறை அழகு பன்னீர் செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரணி மாநில துனை செயலாளர் செல்வம் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்தினால், கும்பகோணம் போரட்ட குழு வருகிற 14-ம் தேதி நரசிங்கன்பேட்டையில் இருந்து அய்யம்பேட்டை வரையுள்ள 45 கிலோ மீட்டருக்கு ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மனித சங்கிலி போராட்டத்தை நடைத்துவதாகவும், இப்போரட்டத்தை தொடர்ந்து,
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.ஆர்.ராதா, வி.வி.சாமிநாதன் போன்ற தலைவர்களின் தலைமையில் அடுத்த மாதம் அக் 1 ம் தேதி தலைமை செயலகத்தின் முன்பு உண்ணா விரத போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக போரட்டகுழு ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.