Newskadai.com
தமிழ்நாடு

தனி மாவட்டமாகுமா கும்பகோணம்??… முதல்வரின் அறிவிப்பிற்காக காத்திருக்கும் மக்கள்…!!

Share this:

கடந்த பல ஆண்டுகளாக கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கக் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும், பல போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கடந்த ஆண்டுகளில், கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் செங்கல்பட்டு என புதிய மாவட்டங்களை பிரித்து அறிவித்தது. இதனையொட்டி கும்பகோணத்தையும் தனி மாவட்டமாக உருவாக்கும் கோரிக்கை வலுத்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு நடத்தி வரும் முதல்வர் பழனிசாமி நேற்று திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். நேற்று முன்தினம் கடலூர், நாகையில் ஆய்வுகள் மேற்கொண்டு, அந்த மாவட்டங்களில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் கும்பகோணம் புதிய மாவட்டமாக அமைக்கக் கோரும் போராட்டக்குழுவினர் அதன் ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் எம்.பி.வைத்தியலிங்கம் ஆகியோரிடம் தஞ்சைக்கு வரும் முதல்வரிடம் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க : http://தனி மாவட்டமாக உருவாகிறதா கும்பகோணம்?… வெற்றி இலக்கை எட்டப்போகும் நீண்ட போராட்டம்…!!

மேலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்த கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ சாக்கோட்டை ஜி.அன்பழகன், தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான வரலாற்று சிறப்புமிக்க கும்பகோணத்தை தனி மாவட்டமாக விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும், தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதல்வரிடம் அளித்துள்ளார்.


Share this:

Related posts

சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை… தலைமறைவான முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வை அலேக்காக தூக்கிய போலீஸ்…!

NEWSKADAI

வெளுத்து வாங்க போகும் வடகிழக்கு பருவமழை : அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை…!!

THAVAMANI NATARAJAN

திருமணமாகி 4 மாதமே ஆன புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… தாலி, மெட்டியை கழட்டி கணவனிடம் கொடுக்க வைத்த அதிகாரிகள்…!

THAVAMANI NATARAJAN

ஆன்லைன் ஆஃப்பரில்… மொபைலுக்கு பதிலா வந்ததைப் பார்த்து!! ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி..!!

THAVAMANI NATARAJAN

ஒரே நாளில் 2வது நீட் தேர்வு மரணம்: தருமபுரி மாணவன் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை…!!

NEWSKADAI

நாகையில் மகளிர் குழுக்களுக்கு மிரட்டல் விடுக்கும் கடன் நிறுவனங்கள்… நடவடிக்கைக்கோரி உதவி கலெக்டரிடம் புகார்…

MANIMARAN M