Newskadai.com
அரசியல்

இப்பவே இப்படியா?… ரஜினி கட்டளையை காற்றில் பறக்கவிட்ட ரசிகர்கள்… போஸ்டர் ஒட்டி அட்ராசிட்டி…!!

Share this:

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் மூலம் ஆட்சியை பிடித்துவிட திமுக தீவிரமாக களத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போதுள்ள ஆட்சியைத் தக்கவைக்க அதிமுகவும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தேர்தலில் போட்டி திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் என்று தமிழக பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக கட்சி ஆரம்பிக்க போவதாக கூறி வந்த ரஜினிகாந்த் இந்த ஆண்டு கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவார் என்று ரஜினி ஆதரவாளர்கள் தெரிவித்து தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். மேலும் ரஜினியே தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று தமிழகத்தின் பல ஊர்களில் போஸ்டர் ஒட்டி ரஜினி ரசிகர்களும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இது போன்ற போஸ்டர்களால் சங்கடத்திற்கு ஆளான ரஜினி தலைமை மக்கள் மன்றம் இனி யாரும் ரஜினி தொடர்பாக எந்தவொரு போஸ்டரும் ஒட்டக்கூடாது என அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பையும் மீறி கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர்கள் நகரம் முழுவதிலும் ரஜினி ஆட்சி மலரட்டும் என்று போஸ்டர் ஒட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த போஸ்டரில், “நாச்சிக்குப்பத்தின் மன்னன் ஆட்சி மலரட்டும்”, “திராவிட அரசியல் இனி போதும்”, “அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்” இப்போ இல்லைன்னா இனி எப்பவும் இல்லை” என்று கிருஷ்ணகிரி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அச்சடித்து ஒட்டியுள்ளனர்.


Share this:

Related posts

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்?… முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை…!!

AMARA

“தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்”… அதிமுகவில் வெடித்தது உச்சகட்ட மோதல்…!!

AMARA

பிரணாப் முகர்ஜி உடலுக்கு இன்று இறுதி சடங்கு…. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நல்லடக்கம்…!

AMARA

தேனியில் போஸ்டர்… ஓபிஎஸ் – இபிஎஸ் வீடுகளில் மாறி, மாறி அமைச்சர்கள் ஆலோசனை… அதிமுகவில் பதற்றம்…!!

AMARA

எம்.பி.கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி… வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்…!!

AMARA

“பாஜகவில் இணையவில்லை”… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அதிரடி விளக்கம்…!

AMARA