Newskadai.com
தமிழ்நாடு

மீண்டும் ஒரு காங்கிரஸ் எம்.பி.க்கு கொரோனா தொற்று… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

Share this:

கொரோனா தொற்று பரவல் அரசியல் பிரமுகர்களை யாரையும் விட்டு வைக்கவில்லை என்பதில் சந்தேகமில்லை அந்த வரிசையில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் அ.செல்லகுமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் அ.செல்லகுமார் இருந்து வருகிறார். அண்மையில், ஒடிஸா மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொருப்பாளராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், சேலத்தில் நடைபெற்ற 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அவருக்கு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் சென்னைக்குச் சென்ற அவர், கொரோனா தொற்று பாதிப்புக்கான பரிசோதனையை மேற்கொண்டார்.

அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடன் கடந்த ஒரு வாரமாக, நேரடித் தொடர்பில் இருந்ததவர்களை தொடர்பு கொண்ட அவர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

Vasanthakumar

தற்போது தனது குடும்பத்தில் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்றும், விலைவில் குணமடைந்துவிடுவேன் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். ஏற்கெனவே, கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினர், டி.செங்குட்டுவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது, கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் கொரோனா தொற்றால் காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார் உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு எம்.பி.க்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Share this:

Related posts

“எங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேணும்”… அதிரடி கோரிக்கையுடன் போராட்டத்தில் குதித்த கோவை விவசாயிகள்…!!

MANIMARAN M

எச்சில் துப்பினால் ரூ.500; மாஸ்க் போடாவிட்டால் ரூ.200… சாட்டையை சுழற்றும் தமிழக அரசு…!!

MANIMARAN M

ரெடியா இருங்க ஜலகண்டாபுரம்… இன்னைக்கு வீட்டுக்கே வரப்போறாங்க… தூள் பறக்கும் தொற்று தடுப்பு…!

AMARA

நவம்பரில் பள்ளிகள் திறப்பா?…. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி விளக்கம்…!!

THAVAMANI NATARAJAN

ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

இரவில் நடந்த கொடூரம் : கோவை மாநகரில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி..!!

MANIMARAN M