Newskadai.com
லைஃப் ஸ்டைல்

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

Share this:

கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடும் விழாவாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது, கிருஷ்ண ஜெயந்தி ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் கொண்டாடப்படும் ஆனால்  இவ்வருடம் பஞ்சாங்கப்படி முன்னதாகவே ஆடி மாத தேய்பிறை அஷ்டமியில் கொண்டாடப்படுகிறது.

பஞ்சாங்கத்தின்படி ஆகஸ்ட் 11ம் தேதி அஷ்டமி திதி யில் காலை 7.55 மணிக்கு துவங்கி அடுத்த நாள் ஆகஸ்ட் 12ம் தேதி காலை 9.36 மணி வரை கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஆகஸ்ட் 11ம் தேதியும் வட இந்தியாவில் ஆகஸ்ட் 12 தேதியும் இவ்விழாவை கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணனை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் நன்மைகள் தேடிவரும் என்பது ஐதீகம். ஸ்ரீ கிருஷ்ணனை, கோபாலன், கண்ணன், முகுந்தன் என்று அழைப்பார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதமிருந்து மாலையில் வீட்டின் வாசற்படியிலிருந்து பூஜை அறை வரை கண்ணனின் பிஞ்சு கால் தடத்தை  கோலமாக வரைந்து வைத்தால் கண்ணன் நம் வீட்டிற்கு வருவார் என்பது ஐதீகம். கணவன் மனைவி சேர்ந்து விரதமிருந்து கண்ணனுக்கு பால் பாயாசம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த வெண்ணை, அவல், சீடை, வாசனையுள்ள பூக்கள், நாவல்பழம் மற்றும் பாயாசம் பேன்றவற்றை அவருக்கு பிரசாதமாக வைத்து கண்ணனை வழிபடுவது வழக்கமும் சிறப்புமாகும்.

கோகுலாஷ்டமியில் கடைபிடிக்கப்படும் விரதமானது பல்லாயிரம் ஆண்டுகள் ஏகாதசி விரதம் இருப்பதற்கு சமமாகும்.


Share this:

Related posts

குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்… எப்படி, எங்கு கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

NEWSKADAI

கிட்னி நோய்கள் கிட்டயே நெருங்காது… இந்த 6-யும் செஞ்சாலே போதும்..!

NEWSKADAI

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI

”அகரம்” சொல்லித் தரும் சிகரங்களே..!! ஆசிரியர் தின வாழ்த்துகள்…

THAVAMANI NATARAJAN

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்… எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

THAVAMANI NATARAJAN