Newskadai.com
தேர்டு ஐ

மற்றொரு போபால் பேரழிவுக்கு திட்டமிடுகிறதா மத்திய அரசு?… கந்த சஷ்டி மடை மாற்றம் இதுக்குத் தானா?

Share this:

வடிவேலு ஒரு படத்துல “கிணத்த காணோம்”ன்னு தேடுற மாதிரி, நாமளும் ஐயோ.. மலையைக் காணோம், ஐயோ… காட்ட காணோம், ஆத்த காணோம், ஏரியை காணோம், குளத்தை காணோம் அப்படின்னு அழ ஆரம்பிச்சு, ஐயோ… ஐய்யோ… சோத்த காணோம்னு கத்தி கத்தி ஏதாவது ஒரு தொழிற்சாலை வாசல்ல செத்து கிடப்போம்.

என்னடா பயமுறுத்தறோம்… அப்படின்னு நினைக்கிறீங்களா… சுற்றுச்சூழல பாதுகாக்க நம்ம நாடு சட்டம் கொண்டு வந்ததுக்கு காரணமே ஒரு பயங்கரமான சம்பவம் தான்.

1984 டிசம்பர் 3 அன்னைக்கி போபாலில் “யூனியன் கார்பைடு” கம்பெனியில இருந்து வெளியான விஷவாயு அந்த ஊரையே சுடுகாடா மாத்திடுச்சு. என்ன ஏதுன்னு தெரியாம கிட்டத்தட்ட 3000 பேர் உடனடியாக செத்துப் போனாங்க. பல லட்சம் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகி அடுத்தடுத்த வருடங்களில் செத்துப் போனாங்க.”தொழிற்சாலைகள் தான் நாட்ட, நாட்டோட பொருளாதாரத்தை முன்னேற்றும், தொழிற்சாலைகளால் தான் வேலைவாய்ப்புகள் பெருகும், தொழிற்சாலைகள் தான் நாட்டின் முதுகெலும்பு” அப்படின்னு கண்மூடித்தனமாக பேசிக்கிட்டு இருந்த, அந்த கொள்கையை ஆதரிச்சுகிட்டு இருந்த அத்தனை அரசியல்வாதிகளையும் தலைகுனிய வெச்சது இந்த கோர சம்பவம்.

இதன் எதிரொலியாக 1986ல் மத்திய அரசு சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதுகாக்க கொண்டுவந்த சட்டம் தான் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் -1986”. இச்சட்டம் தொழிற்சாலைகளுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. ஆபத்தான ரசாயனங்கள் கையாளும் பல தொழிற்சாலைகளுக்கு தடைவிதித்தது. போபால் விஷவாயு போன்ற சம்பவங்கள் இதுவரை ஏற்படாமலிருக்க காரணம் இந்த சட்டம் தான். இது தொழிற்சாலை முதலாளிகளுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. தொழிற்சாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்பும், பின்பும் பல்வேறு துறைகளிலும் (வனம், நீர், காற்று, கழிவுநீர், தொழிலாளர் நலன்) தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியதை கட்டாயமாக்கியது.

ஊர் மக்களின் விருப்பத்திற்கும் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் யார் வேண்டுமானாலும் தொழிற்சாலை அமைவதை எதிர்த்து அல்லது தொழிற்சாலைகளின் செயல்பாட்டில் உள்ள குறைகள் குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

கெட்டியான பாலில் கொஞ்சம் தண்ணி கலக்குற மாதிரி 2006ல் நம்ம சுற்றுச்சூழல் சட்டத்துல சில பல மாற்றங்களை கொண்டு வந்தாங்க. காரணம் உலகமயமாக்கல்.

அதுதான் இன்னிக்கு நடைமுறையில் இருக்கிற (Environment Impact Assessment – 2006) சட்டம். ஏற்கனவே தண்ணீர் கலந்த பால்ல… பல லிட்டர் தண்ணீர் கலக்குற மாதிரி இந்த சட்டத்தில் இருந்த பல கடுமையான பிரிவுகளை நீக்கி அவசர அவசரமா கொண்டுவரப்பட்டு இருக்கிற சட்டம் தான் EIA -2020 (Environment Impact Assessment -2020).

1984 சுற்றுச்சூழல் சட்டம் எதற்கெல்லாம் NO சொன்னுச்சோ அதுக்கெல்லாம் YES சொல்றதுதான் இந்த சட்டம்.

  • தொழிற்சாலை பெரு முதலாளிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்குது.
  • தொழிற்சாலைகளுக்கு எதிரா வாய்திறக்க யாருக்குமே உரிமை இல்லை.
  • தடையில்லா சான்றிதழ் எல்லாம் அவசியமில்லை.
  • தொழிற்சாலை கழிவுகள் எங்க வேணா கொட்டிக்கலாம். No objection.

மொத்தத்துல… இதுவர நம்ம நாட்டோட சுற்றுச்சூழலை ஓரளவு பாதுகாத்து வந்த 1984 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை தூக்கி குப்பையில் போட சொல்ற சட்டம் தான்… இந்த (Environment Impact Assessment -2020) EIA 2020. இந்த சட்டம் மீண்டும் ஒரு “போபால்” அல்ல..

மேலும் படிக்க: http://முருகனும் தந்தை பெரியாரும்… தீப்பொறி தீயாய் மாறியது எப்படி…?

ஓராயிரம் போபால் சம்பவங்கள் நடக்க கம்பளம் விரிக்குது. பல கோடி பேராய் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை பாட முடிந்த நம்மால் இந்த EIA 2020 விஷயத்திற்காகவும் மக்களை திரட்ட முடியும். அசால்ட்டாக இருந்தால்… அரோகரா…தான்…


Share this:

Related posts

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

சிறுகதை : கண்காணிக்கப்படும் பட்டு – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : நாசதீய சூக்தம்

NEWSKADAI

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M

“காதலித்து பார்”… ஆண் – பெண் நேசத்தை ஆதரிக்க பெற்றோரை தடுப்பது எது?

NEWSKADAI

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : யசூர் வேத சம்கிதை

NEWSKADAI