Newskadai.com
விளையாட்டு

கேப்டன் பதவியிலிருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்… கேகேஆர் அணியில் என்னதான் நடக்கிறது..!!

dinesh karthik resign
Share this:

ஐபிஎல் 2020 தொடர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளி பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

dinesh karthik resign

இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாட இருக்கின்ற சூழலில் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இது குறித்து கேகேஆர் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் வெளியிட்ட அறிக்கையில், பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

dinesh karthik resign

தினேஷ் கார்த்திக்கின் இந்த முடிவு எங்களை ஆச்சர்யபட வைக்கிறது, இருப்பினும் அவருடைய இந்த முடிவுக்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். தினேஷ் கார்த்திக்கின் விலகலையடுத்து அணியின் துணை கேப்டன் இயன் கார்கன் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேகேஆர் அணியை கேப்டனாக வழி நடத்த மார்கன் ஒப்புக் கொண்டது எங்களது அதிர்ஷடம் என்று வெங்கி மைசூர் கூறியுள்ளார்.


Share this:

Related posts

ஐபிஎல் 2020 : நூலிழையில் வெற்றியை தவறவிட்ட கிங்ஸ் 11 பஞ்சாப் அணி…

MANIMARAN M

விக்கெட்டுகள் கையில் இருந்தும் வெற்றியை கோட்டை விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்..!!!

MANIMARAN M

வெறித்தனமாக ஆடிய சென்னை : மிரண்டுபோய்த் தோற்ற ஹைதராபாத்…

MANIMARAN M

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி… தள்ளிப்போகிறதா ஐ.பி.எல். போட்டி…!!

MANIMARAN M

சிஎஸ்கே உடன் மீண்டும் இணைந்த நட்சத்திர வீரர்… விசில் போட்டு கொண்டாடும் சென்னை ரசிகர்கள்…

MANIMARAN M

ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றிக்கு இதுதான் காரணமாம்… ஐபிஎல் 10வது ஆட்டத்தில் நடந்த அதிரடி

NEWSKADAI