Newskadai.com
தமிழ்நாடு

இரண்டரை வயது பெண் குழந்தை கடத்தல்… 10 நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியானது அதிர்ச்சி பின்னணி…!!

Share this:

சென்னையில் கடத்தப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தையை போலீசார் அஸ்ஸாமில் அதிரடியாக மீட்ட சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

சென்னை ராயபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள குடியிருப்பில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருபவர் பப்லு. இவருக்கு மர்ஜினா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. பப்லுவுக்கும் சமீபத்தில் சுனில் என்ற இளைஞன் அறிமுகமாகியுள்ளார். அவன் கடந்த 6ம் தேதி சாப்பாடு வாங்கி தருவதாக கூறி குழந்தையை தூக்கிச் சென்றுள்ளான். வெகு நேரமாக சுனில் திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தில் எங்கு தேடியும் சுனிலையோ, குழந்தையையோ காண முடியவில்லை. அதன் பின்னரே அவன் குழந்தையை கடத்திக்கொண்டு தப்பியது தெரியவந்தது.

இதையடுத்து பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, ராயபுரம் போலீசாரும் உடனடியாக களத்தில் இறங்கினர். பப்லு தங்கியிருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார். சுனில் குழந்தையை தூக்கி செல்வதை உறுதிபடுத்திக்கொண்டனர். மேலும் அந்த வீடியோவில் இருந்து கிடைத்த போட்டோவை வைத்து ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஒட்டி பொதுமக்களிடம் தகவல் சேகரிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து சுனில் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை அஸ்ஸாமைச் சேர்ந்த நபரின் போன் நெம்பர் ஒன்று சிக்கியது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, எதிர்முனையில் பேசியவர் சரியாக பதிலளிக்காமல் போனை துண்டித்து, சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அஸ்ஸாம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த நபரிடம் நடந்த விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டிட வேலை செய்து வரும் உறவினர்கள் மூலமாக சுனிலுடன் பழக்கம் ஏற்பட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து சுனில் குழந்தையுடன் செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் இருப்பது உறுதியானது. ஆனால் போலீசார் வரும் தகவலை அறிந்து சுனில் அங்கிருந்து தப்பியுள்ளான். ஆனால் குழந்தை மர்ஜினா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். 10 நாட்களுக்குப் பிறகு மகளை கண்ட தாய் கண்ணீர் விட்டு கதறினார். மேலும் போலீசாருக்கும் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால் யாரும் சுனிலுக்கு வேலை தரவில்லையாம், அதனால் குழந்தையை காண்பித்து வேலை வாங்கவே அவன் மர்ஜினாவை தூக்கி வந்ததாக கூறப்படுகிறது.


Share this:

Related posts

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்… அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை…!!

MANIMARAN M

கோவை, நீலகிரி மக்களே உஷார்… மீனவர்களே நீங்களும் ஜாக்கிரதையா இருங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

AMARA

சேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…!!

MANIMARAN M

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

எங்கே மனிதாபிமானம்?… மீன் லாரி விபத்தில் படுகாயமடைந்தவர்களை பார்க்காமல் மீனை அள்ளிச்சென்ற மக்கள்…!!

THAVAMANI NATARAJAN