தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள், தற்போது பேய் மழையால் விழி பிதுங்கி நிற்கின்றனர்.போதாக்குறைக்கு நேற்று நள்ளிரவில் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க:http://“கடவுள் தேசத்தின் கதறல்”… பேய் மழையால் மீண்டும் அவலக்குரல் எழுப்பும் கேரளம்… வீடியோ கேலரி…!!
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டிமுடி கிராமத்தில் கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 80 பேர் காணவில்லை என்ற தகவல் வெளியாயின.
உடனடியாக தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முதற்கட்டமாக 10 பேரின் சடலங்களையும், 5 பேரை உயிருடனும் மீட்டனர். மொத்தம் 80 பேர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க:http://கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…!!
இதனால் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சேற்றில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் 20 வீடுகள் சேற்றில் புதையுண்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.