Newskadai.com
இந்தியா

கேரளாவில் அடுத்த அதிர்ச்சி… நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு…!!

kerala
Share this:

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டிமுடி கிராமத்தில் கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த 30 குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன, 80 தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியான.

மேலும் படிக்க: http://“மனதுக்கு பிடித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருக்கிறோம்”… விமான விபத்தில் பலியான பயணியின் உருக்கமான பதிவு…!!

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளின் மூலம் இதுவரை 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்ணில் புதையுண்ட 22 தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: http://கனமழையால் அரங்கேறிய கோர விபத்து… கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்தது என்ன??

இரவு முதலே தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களின் மீதமுள்ள 44 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதேபோல் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


Share this:

Related posts

விமான நிலைய குத்தகை விவகாரம்: மத்திய அரசுக்கு மாஸாக எதிர்ப்பு காட்டிய பினராயி விஜயன்…!!

MANIMARAN M

நிறுத்தப்பட்டது 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி… பகீர் தகவலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி…!!

THAVAMANI NATARAJAN

“இதுவரை பக்க விளைவுகளே இல்லை”… இறுதி கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து…!!

MANIMARAN M

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

MANIMARAN M

“ஒருபோதும் மொழி திணிப்பு கிடையாது” : மத்திய அமைச்சர் திட்டவட்டம்…!!

MANIMARAN M

பாய்ந்த கண்டனங்கள்…. பதுங்கும் மத்திய அரசு… புதிய சட்டத்தில் வருமா மாற்றம்..???

MANIMARAN M