Newskadai.com
இந்தியா

விமான நிலைய குத்தகை விவகாரம்: மத்திய அரசுக்கு மாஸாக எதிர்ப்பு காட்டிய பினராயி விஜயன்…!!

Share this:

கடந்த 2019-ம் ஆண்டு முதல் லக்னோ, அகமதாபாத், மங்களூரு ஆகிய விமானநிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஜெய்ப்பூர், கவுஹாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பராமரிக்க 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது.

மத்திய அரசின் இந்த முடிவு தொடர்பாக தொடர்பாக விவாதிக்க, கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அனைத்துக் கட்சிக்கூட்டத்தை காணொலி மூலம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார். இதில் பாஜக தவிர்த்து மற்ற அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர். காணொலி மூலம் நடந்த இக்கூட்டத்தில் திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்துக்கு குத்தகைக்கு விடும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில் ‘திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு அதிக இடத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. அதனால் கேரள அரசு இதில் முக்கியப் பங்குதாரராக இருந்துவரும் நிலையில் அதானி குழுமத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதை ஏற்க முடியாது. தனியார் நிறுவனம் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் விமானநிலையத்தை பராமரிக்க இயலாது. இது மாநில அரசுக்கே சவால் விடக் கூடிய செயல். மத்திய அரசின் இந்த முடிவை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். மேலும் இது தொடர்பாக தேவைப்படும் சட்டரீதியான கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தின் நலன் காக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.


Share this:

Related posts

சிக்கிய சீன நிறுவனங்கள் : ஆயிரம் கோடி ஹவாலா மோசடி… அதிரடி காட்டும் இந்தியா

MANIMARAN M

ஓடுதளத்தில் இரண்டாக உடைந்து விழுந்த விமானம்… கேரளாவில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு??

AMARA

நாய் கறிக்கு தடை : மாநில அரசு அதிரடி.

NEWSKADAI

“இந்தியா கலாச்சாரத்தில் இருந்து இந்தியை நீக்கவே முடியாது”… மார்தட்டிக்கொள்ளும் அமித் ஷா, மோடி…!!

NEWSKADAI

இணையதள குற்றங்கள் 500% அதிகரிப்பு – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதிர்ச்சித் தகவல்..!!!

MANIMARAN M

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

MANIMARAN M