Newskadai.com
லைஃப் ஸ்டைல்

சுற்றுலா பயணிகளுக்கு கதவுகளை திறக்கும் கடவுளின் தேசம்…

Share this:

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல மாதங்களாக நாடு முழுவதும் பல கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களாக பொது மக்கள் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் ஊரடங்கில் சில சில தளர்வுகளை அளித்துள்ளது.

இரும்புத்திரை நாடு போல கடுமையான சட்டதிட்டங்களை தனது மாநில மாவட்ட எல்லைகளை முழுவதுமாக மூடி கொரோனாவை வெற்றிகரமாக விரட்டிய மாநிலம் தற்போது உள்ளூர் மக்களுக்கு சுற்றுலா தலங்களை திறந்துவிட்டு இருக்கிறது. ஐந்தாறு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டது போல் வாழ்ந்த கேரள மக்கள் அரசின் இந்த திடீர் தளர்வினால் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடி பலவித கட்டுபாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தேக்கடி யானை சவாரிக்கும் படகுச் சவாரிக்கும் பிரபல்யமானது. மேலும் அங்கு டைகர் வியூ, நேச்சர் வாக், பார்டர் வாக், மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலா பயணிகளிக்கான விருந்தாக அமைந்துள்ளது.

நேற்று திறக்கப்பட்ட தேக்கடியில் படகு சவாரி காலை 9.30 மணிக்கு துவங்கியது. வழக்கமான தினங்களில் ஐந்து ட்ரிப்களை கொண்ட படகு சவாரி கொரொனா கட்டுபாடுகளினால் தினம் இரண்டு ட்ரிப்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கும், மாலை 3.30 மணிக்குமான இரண்டு ட்ரிப்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு வெப்பமாணியைக் கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே படகில் அனுமதிக்கபடுகின்றனர். கட்டாய முகக் கவசம், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவிகித பயணிகள் மட்டுமே படகில் அனுமதிக்கப்படுகின்றனர். 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் அனுமதியில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

ஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது… மெர்சல் டாக்டர்

NEWSKADAI

குழந்தை பாக்கியம் நிச்சயம்…!! குபேரனை வணங்குங்கள், குடும்பத்தில் குழப்பம் நீங்கும்… இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவை தடுக்க இந்த 6 பொருட்கள் போதும்… சூப்பரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் இதோ…!!

THAVAMANI NATARAJAN

அற்புதமான நாள்… எதிர்ப்பார்த்த காரியம் கைகூடும்… ராசியான எண், வண்ணம் இதுதான்…!!

THAVAMANI NATARAJAN

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி….!!

THAVAMANI NATARAJAN