Newskadai.com
இந்தியா

நாட்டையே உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு: முக்கிய புள்ளிகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!

Share this:

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேரளா தங்க கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. ”அமீரகத்திலிருந்து கேரளாவில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்திற்கு பார்சல்களை அனுப்பி தங்கம் கடத்தியதாக முன்னாள் துணைத் தூதரக செயலர் ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரனை நடைபெறுகிறது. இந்த கடத்தல் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி நடந்துள்ளதாக என்ஐஏ குற்றஞ்ச்சாட்டியுள்ளது.

வெளியுறவுத்துறை சட்டப்படி தூதரக அதிகாரிகளுடன் மாநில அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ நேரடி தொடர்பு வைக்கக்கூடாது என்ற நிலையில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துடன் கேரளாவை சேர்ந்த சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பலருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதால் அவர்களை பயன்படுத்தி மேலும் பல முறைகேடுகள் நடந்திருக்கலாம் என யூகிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றது.

பணியில் கவனக்குறைவாக இருந்ததாலும், வேலைக்கு ஒழுங்காக ஆஜராகாத காரணத்தினாலும் கேரளாவில் உள்ள அமீரக துணை தூதரின் பாதுகாவலரான ஜெயகோஷை சஸ்பெண்ட் செய்து திருவனந்தபுரம் கமிஷனர் பல்ராம்குமார் உபாத்யாயா உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பு, மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அமீரக துணை தூதரின் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட ஜெயகோஷிற்கு 3 முறை பணி நீட்டிப்பை டிஜிபி வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சுங்க இலாகாவினர் வட்டியூர் காவு மற்றும் ஆக்குளம் பகுதிகளில் உள்ள ஜெயகோஷிற்கு சொந்தமான இரண்டு வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளார்கள். இதுகுறித்த கூடுதல் விசாரணைக்காக கட்டுப்பாட்டறை உதவி கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமீரகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் குறித்து விசாரித்து வரும் என்.ஐ.ஏ, சட்டத்திற்கு புறம்பாக தூதரகத்துடன் தொடர்பில் இருந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Share this:

Related posts

பயணிகளுடன் இரண்டு துண்டாக உடைந்து விழுந்த விமானம்… கருப்பு பெட்டி சிக்கியது…!!

THAVAMANI NATARAJAN

29 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் கால் வைத்தார் பிரதமர் மோடி… மகிழ்ச்சியில் இந்துக்கள்…!!

NEWSKADAI

“உங்க மேக் இன் இந்தியா, தற்சார்பு பேச்செல்லாம் பித்தலாட்டம்”… மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்…!!

POONKUZHALI

நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30-ல் வெளியாகிறது தீர்ப்பு…!!

MANIMARAN M

நவம்பர் 1 முதல் கல்லூரிகள் தொடங்கும்… கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN

NEET, JEE தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா? மாணவர்களின் முடிவு இதோ…!!

POONKUZHALI