Newskadai.com
இந்தியா

“மனதுக்கு பிடித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருக்கிறோம்”… விமான விபத்தில் பலியான பயணியின் உருக்கமான பதிவு…!!

Share this:

வந்தே பாரத் மிஷன் மூலம் துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 185 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் ஒடு பாதையிலிருந்து விலகி 35 அடி ஆழத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை விமானி மற்றும் துணை விமானி உட்பட 18 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்த சரஃபு பிலசேரி என்ற கேரள பயணி, “Back to Home”, தங்களது மனதிற்கு பிடித்த இடமான கேரளாவிற்கு செல்ல பறந்துக் கொண்டிருக்கிறோம் என்று முகநூலில் பதிவிட்டிருந்தார். மேலும், முகத்தில் ஃபேஸ் ஷீல்டு அணிந்துக் கொண்டு தனது மனைவி, மகளுடன் விமானத்தில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தன் முகநூல் பதிவில் இணைத்திருந்தார். இந்த பதிவே சரஃபுவின் இறுதி பதிவாகியது, இவ்விபத்தில் சரஃபு பலியானார். அதிர்ஷ்டவசமாக சரஃபுவின் மனைவியும் மகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதே விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ஜிடான் பைசல் பாபு, ஹனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் ஆகியோர் பயணம் செய்தனர். இவர்கள் நிலை குறித்து மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் கூறுகையில், இந்த விமானத்தில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த அந்த மூவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

புதிய கல்விக்கொள்கை 2020 : ஆகஸ்ட் 31 வரை கருத்து தெரிவிக்கலாம் – மத்திய அரசு

MANIMARAN M

உ.பி யில் பிரம்மாண்டமான சினிமா நகரம் : முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..!!

MANIMARAN M

காத்தையே காசுக்கு வித்தவங்க!! ரயில மட்டும் விட்டுறுவோமா!! கூவி கூவி விற்கும் மத்திய அரசு…

THAVAMANI NATARAJAN

பாய்ந்த கண்டனங்கள்…. பதுங்கும் மத்திய அரசு… புதிய சட்டத்தில் வருமா மாற்றம்..???

MANIMARAN M

செப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு…!!

AMARA

ஆன்லைனில் சாத்தியமா நீட் தேர்வு?…. மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

MANIMARAN M