Newskadai.com
இந்தியா

கேரள முதல்வரையே மிரள வைத்த கோமதி… ‘சிங்கிள்’ஆளாக ஜெயித்த சிங்கப்பெண்…!!

Share this:

அசாம், பீகார், ஜார்கண்ட், டெல்லி, மும்பை என கொட்டி தீர்க்கும் தென்மேற்கு பருவமழை கேரளாவையும் ஒரு கை பார்த்து உள்ளது. பெரு மழையின் காரணமாக மூணாறு ராஜ மலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூணாறு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தமிழர்கள் குடியிருந்த பகுதி மண்ணோடு மண்ணாக புதைந்தது. இதுவரை 55 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

மூணாறு நிலச்சரிவை கேரள முதல்வர் பினராய் விஜயன் பார்வையிடச் சென்றபோது பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் அவர்களுக்கு சொந்த இடம் கொடுத்து அரசு வீடு கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோமதி என்ற சமூக செயற்பாட்டாளர் தனி மனுஷியாக சாலையில் நின்று போராட்டம் நடத்தினார். முதல்வரின் வருகையை ஒட்டி கோமதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் பினராய் விஜயன் செய்தியாளர்களிடம், “பாதிக்கப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் ஐந்து லட்ச ரூபாய் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சொந்த நிலம் வழங்கி அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும். உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை மாநில அரசு ஏற்கும்.” என்று தெரிவித்தார். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக தனிமனிதப் போராட்டம் நடத்திய கோமதியின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Share this:

Related posts

நவம்பர் 1 முதல் கல்லூரிகள் தொடங்கும்… கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN

பயணிகளுடன் இரண்டு துண்டாக உடைந்து விழுந்த விமானம்… கருப்பு பெட்டி சிக்கியது…!!

THAVAMANI NATARAJAN

சரக்கில் சானிடைசர் கலந்தடித்த 10 ‘குடி’மகன்கள் பலி…. ஆந்திராவில் அரங்கேறிய பரிதாபம்…!!

NEWSKADAI

பேராசை மருத்துவரின் பேயாட்டம்: 100 கொலைகள்… முதலைக்கு இரையான அப்பாவிகளின் உடல்கள்… திடுக்கிடும் தகவல்கள்…!!

AMARA

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… இந்தியாவிலும் நிறுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி பரிசோதனை…!!

MANIMARAN M

இந்தியாவின் கடன் சுமை இத்தனை லட்சம் கோடியா?… மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M